19.2.2021 facebook live

நாளை வெள்ளிக்கிழமை (19.2.2021) மாலை ஆறு மணிக்கு ஃபேஸ்புக் லைவ்-இல் பேசுகிறேன். தலைப்பு முகமூடிகளின் பள்ளத்தாக்கு. நீங்கள் காமெண்ட் பாக்ஸில் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தருவேன். கேள்விகள் இருந்தால் எனக்கும் எழுதலாம். முடிந்தவர்கள் கலந்து கொள்ளுங்கள்.charu.nivedita.india@gmail.com

முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி அராத்து…

எவ்வளவு சொன்னாலும் இன்னும் சொல்ல வேண்டியிருக்கிறது, முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி.  அது ஒரு நவீன காவியம்.  இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நீங்களும் நானும் ஒன்றேபோல்தான் கருதுவோம்.  நான் கிழக்கு என்றால் ஜெ. மேற்கு என்பார்.  நான் மரியோ பர்கஸ் யோசா ஆகா ஓகோ என்றால் ஜெ. அவர் ஒரு வேஸ்ட் என்பார்.  நான் கிளாஸிக் என்றும் சிலாகிக்கும் படத்தை அவர் தண்டம் என்பார்.  வேண்டுமென்று செய்வதில்லை.  என் கருத்து என்ன என்று தெரியாமலேயே அவர் சொல்வார்.  … Read more

எமிரேட்ஸ்/அமீரகம் நண்பர்களுக்கு…

அமீரகத்தில் வசிக்கும் நண்பர்களுக்கு முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலும், லத்தீன் அமெரிக்க சினிமா என்ற நூலும் தேவைப்படும் அமீரக நண்பர்கள் எனக்கு எழுதினால் அதை அமீரகத்தில் உள்ள ஒரு நண்பருக்கு அனுப்பி வைக்க முடியும். எத்தனை பிரதிகள் வேண்டும் என்ற விபரம் தெரிய வேண்டும். வாக்குக் கொடுத்து விட்டு வாங்காமல் இருந்தால் புத்தகங்கள் அமீரகத்திலேயே தங்கி விடும். அந்த சிரமத்தை மட்டும் அளிக்கக் கூடாது. இதற்கான விநியோக விஷயங்களைச் செய்ய என் நண்பர் ஒருவர் இசைந்துள்ளார். அவர் இலக்கியவாதி … Read more

லத்தீன் அமெரிக்க சினிமா

உலக சினிமா என்றால் அதிக பட்சமாக நாம் ஒருசில நாடுகளையே கவனிக்கிறோம்.  குறிப்பாக, ஹாலிவுட், கொரியா, ஜப்பான், மற்றும் ஒரு சில பிரபலமான ஐரோப்பிய இயக்குனர்கள்.  இவைதான் இந்தியாவில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் சுற்றிச் சுற்றி வருகின்றன.  திரைப்படக் கல்லூரிகளில் கூட மற்ற நாடுகளின் திரைப்படங்கள் பற்றிப் பேசப்படுவதில்லை.  மேலும், ஆவணப் படங்கள் என்று ஒரு தனிப் பிரிவே இருக்கிறது.  சினிமா பற்றிய நம்முடைய ஒட்டு மொத்த அனுபவத்தையே மாற்றக் கூடியவை ஆவணப் படங்கள். Ulrike … Read more

பிஸ்மில்லா கானும் முகமூடிகளின் பள்ளத்தாக்கும்…

முகமூடிகளின் பள்ளத்தாக்கு இன்று அச்சுக்குப் போய் விடும்.  எல்லா எழுத்தாளர்களுக்குமே தாங்கள் எழுதிய நாவல்தான் தங்கள் குழந்தை மாதிரி.  ஆனால் எனக்கு முகமூடிகளின் பள்ளத்தாக்கு அப்படி அல்ல.  ஏனென்றால், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், அப்படி ஒரு நாவலை என் வாசிப்பு அனுபவத்தில் கண்டதில்லை.  இதை நான் மட்டுமல்ல, படிக்கும்போது நீங்களும் உணர்வீர்கள் என்பதை அறுதியிட்டுக் கூறுவேன்.  ஆஷிஷ் நந்தியும் அதையேதான் சொல்லியிருக்கிறார்:  இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை.   நான் … Read more