இன்று க்ளப்ஹவுஸ் சந்திப்பு

இன்று மாலை ஆறு மணி என்று குறிப்பிட்டிருந்தேன். தவறு. இன்று மாலை ஆறரை மணி. இந்திய நேரம். 16.6.2021. புதன்கிழமை. குறிப்பிட்டு எந்தப் பொருளும் இல்லை. நீங்கள் கேள்விகள் கேட்கலாம். ஒரு உரையாடலாகவே இருக்கும். https://www.clubhouse.com/event/mWrbvAJ8 இப்போது அதிகம் நம் ப்ளாகில் எழுதுவதில்லை என்று நினைத்திருப்பீர்கள். bynge.in இல் வாரம் இரண்டு அத்தியாயம் வருகிறது. அ-காலம். நீங்கள் படிக்க வேண்டும். ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் பிஞ்ஜ் டாட் இன் – ஐ டவுன்லோட் செய்து அ-காலம் படிக்கலாம். … Read more

க்ளப்ஹவுஸில் சந்திப்போம்

https://www.clubhouse.com/event/mWrbvAJ8 புதன்கிழமை மாலை ஆறு மணிக்கு க்ளப்ஹவுஸில் வாசகர் கேள்விக்கு பதில் அளிக்கிறேன். ஒருங்கிணைப்பாளர்கள்: காயத்ரி, அராத்து.நண்பர்கள் மது அருந்தி விட்டு வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சந்திப்பு முடிந்ததும் அருந்திக் கொள்ளுங்கள்.

ஒரு நாவல் – ஒரு லட்சம் பரிசு*

ஜீரோ டிகிரி – தமிழரசி அறக்கட்டளை இணைந்து நடத்தும் நாவல் போட்டிக்கு உங்கள் நாவலை அனுப்பக் கடைசித் தேதி செப்டெம்பர் 15, 2021. விதிமுறைகள்: 1) குறைந்த பட்சம் 30000 – அதிக பட்சம் 35000 சொற்களுக்கு மிகாதிருக்க வேண்டும் 2) யுனிகோடில் டைப் செய்து வேர்ட் டாகுமெண்டாக மட்டும் அனுப்ப வேண்டும். 3) ஒருவர், ஒரு நாவலை மட்டுமே அனுப்பலாம் 4) அனுப்பும் முகவரி: zerodegreeaward@gmail.com 5) நாவல், சொந்தக் கற்பனையே, இதற்கு முன் வேறெங்கும் … Read more

அற்புதம்

உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நடந்திருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்றே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் தினந்தோறும் நடக்கின்றன என்பேன். எனக்கே சரியாகத் தெரிவதில்லை. ஒரு சித்தர் மற்றவர்களைக் கட்டிப் பிடிக்கும்போது அவர்கள் மயக்கம் போட்டு விழுவதைப் பார்த்தேன். என்னையும் கட்டிப் பிடித்தார். சீ என்று அருவருப்பாகத்தான் இருந்ததே தவிர மயக்கமும் வரவில்லை, மண்ணாங்கட்டியும் வரவில்லை. ஆனாலும் அற்புதங்களை மறுக்க மாட்டேன். ஏனென்றால், தினமும் இல்லாவிட்டாலும் – தினமும் நடந்தால் அது அற்புதம் இல்லையே? – … Read more

அதிகாரமும் விளிம்புநிலையும்…

என்னுடைய பழைய கட்டுரைத் தொகுப்புகளுக்குப் புதிய பதிப்பு கொண்டு வரும்போது அவற்றைப் படித்து, தேவையில்லாதவற்றை நீக்கி விடுவது என் வழக்கம்.  அப்படி நீக்கும் பகுதிகள் அதிகம் இருக்காது.  இருநூறு பக்கத்தில் பத்து பக்கம் இருக்கும்.  அந்தப் பத்து பக்கமும் ஜெயமோகனுக்கு எழுதும் மறுப்பாக இருக்கும்.  ஒரே ஒரு நூலில் மட்டும் இருநூறுக்கு நூறு பக்கம் இருந்தது.  அனைத்தையும் நீக்கி விட்டேன்.  ஏனென்றால், ஒரு சக எழுத்தாளருக்கு மறுப்பு சொல்லிக் கொண்டிருப்பதும், சண்டை போட்டுக் கொண்டிருப்பதும் என் வேலை … Read more