ஜீஜி: நெடுங்கதை : ப்ரஸன்னா

கதைக்குள் செல்வதற்கு முன்னால் ப்ரஸன்னா பற்றி ஒரு வார்த்தை: இன்று காலை எழுந்து பூனைகளுக்கு உணவு கொடுத்து விட்டு, இரவு உறங்கச் செல்லுமுன் அணைத்து விட்டுப் போயிருந்த கைபேசியைத் திறந்தேன். ப்ரஸன்னாவின் கடிதம். கூடவே ஒரு கதையும் இருந்தது. நெடுங்கதை. எழுந்து இன்னும் பல் கூடத் துலக்கியிருக்கவில்லை. கதை அப்படியே என்னை உள்ளிழுத்துக் கொண்டது. ப்ரஸன்னாவை எனக்கு ஒரு வருடமாகத் தெரியும். ஆரம்பத்தில் என் கட்டுரைகளைக் கடுமையாக விமர்சித்து எழுதுவார். ஆனாலும் இவரிடம் ‘தீ’ இருக்கிறது என்பதை … Read more

ஷ்யாம் சிங்கா ராய்

ஷ்யாம் சிங்கா ராய் பார்த்தேன். இது போன்ற மறுபிறவி கதையம்சம் கொண்ட ஓம் ஷாந்தி ஓம் ஞாபகம் வந்தது. ஓம் ஷாந்தி ஓம் இன்னும் நன்றாக எடுத்திருந்தார்கள். ஷ்யாம் சிங்கா ராய் நல்ல கதை. ஆனால் ரொம்பவும் மசாலாவாக எடுத்திருக்கிறார்கள். இதே கதை ஒரு கலைப்படைப்பாக எடுக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ரோஸியாக நடித்திருக்கும் சாய் பல்லவி மிகவும் ஈர்த்தார்.

எனக்குப் பூனைகளைப் பிடிக்காது : நிர்மல் ம்ருன்ஸோ

எனக்குப் பூனைகளைப் பிடிக்காது. பூனைகளைக் கொஞ்சுவது, உணவு வைப்பது போன்ற எதிலும் ஈடுபாடே கிடையாது. சிலர் அதன் பட்டுத் தோலை வருடி அது சுகத்தில் சொக்குவதைப் பார்த்து மகிழ்வார்கள். எனக்கு பூனை என்பது எல்லா உயிரினம் போல அதுவும் மரியாதைக்குரிய ஒரு உயிரினம், அவ்ளோவுதான் ! இப்போது என்னவென்றால் வீட்டிலிருந்து வெளியே கால் வைத்ததும் இரண்டு பூனைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன. யார் வீட்டுப் பூனைகளோ அல்ல. தெருப் பூனைகள். நாம் நடந்து செல்லும்போது குறுக்கு மறுக்காக … Read more

தமிழ்

எனக்கு எந்த மொழியின் மீதும் தனிப்பட்ட முறையில் பற்றோ பாசமோ வெறியோ கிடையாது.  எல்லா மொழியும் ஒன்றே.  எல்லா தேசமும் ஒன்றே.  எந்த விதமான இனப் பற்றும், மொழிப் பற்றும், தேசப் பற்றும் இல்லாதவன் நான். மேலும் மனிதனின் வயது அதிகப் பட்சம் நூறு.  அதிலும் லட்சத்தில் ஒருவர்தான் நூறை நெருங்குகிறார்கள்.  மற்றபடி எண்பது தொண்ணூறுதான்.  அதுவே பெரிய சாதனை.  இந்தத் துக்கடா வாழ்வில் தமிழ் என்ற மொழி இருந்தால் என்ன, அழிந்தால் என்ன?  வாழ்ந்தால் மகிழவும் … Read more

வயது

பல விஷயங்களில் நான் ஒரு ஐரோப்பியனைப் போல் யோசிப்பவன், வாழ்பவன் என்று சொன்னால் அது அவ்வளவாக யாருக்கும் புரிவதில்லை. சமயங்களில் என் மீது உண்மையான அக்கறையினால் சிலர் காட்டும் அன்பே எனக்கு வன்முறை போல் தோன்றுவதற்குக் காரணமும் இதுதான். “சாருவுக்கு வயசாய்டுச்சு, அவரை ரொம்பத் தொந்தரவு பண்ணாதீங்கப்பா” என்று யாரும் உண்மையான அக்கறையுடன் சொன்னால் எனக்கு அது என் மீது செலுத்தப்படும் உச்சக்கட்ட வன்முறை. கீழே உள்ள புகைப்படத்தையும் வசனத்தையும் பாருங்கள். நான் சொல்ல வருவது புரியும். … Read more