சொற்கடிகை – 2

2. பொதுவாக நான் இரங்கல் கட்டுரைகள் எழுதுவதில்லை என்பதை என் வாசகர்கள் கவனித்திருக்கலாம்.  அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மரணத்தைத் தவிர வேறு எந்த செய்தியும் செவிகளில் விழவில்லை.  எல்லோருக்கும் இந்த அனுபவம்தான்.  என் நண்பர்கள் யாரும் எந்த மரண செய்தியையும் எனக்கு அனுப்புவது இல்லை.   இரங்கல் கட்டுரைகள் எழுதாதற்கு ஒரே காரணம், அன்னாரைப் பற்றி நான் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருப்பேன்.  ஆனால் சமூகமோ அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்.  எப்படி எழுதுவது?  ஒரு நடிகர் இறந்தார்.  … Read more

சொற்கடிகை – 1

நான் வசிக்கும் இந்த வீட்டில் என் இஷ்டப்படி மட்டுமே இருந்து விட முடியாது.  குடித்துக் கொண்டிருந்த காலத்தில் வீட்டில் ஒரு ’பார்’ இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.  தமிழ்நாட்டில் மத்தியதர வகுப்பைச் சார்ந்த ஒரு இல்லத்தரசியின் வீட்டில் அது கற்பனையில் கூட சாத்தியம் இல்லாதது.  மேலும், நான் ஊர் உலகமெல்லாம் சுற்றுகின்ற ஆள்.  அவந்திகாவுக்கோ வீடுதான் உலகம்.  அதனால் அவளுக்கென்று இருக்கும் இந்தச் சிறிய வெளியில் நானும் ஆக்ரமித்துக் கொள்வது ஆகாது என்று நானே என்னைக் குறுக்கிக் … Read more

காதலின் இசை : அருண்மொழி நங்கை

என் எழுத்தை வாசித்தவர்களுக்கும், என்னை நேரில் அறிந்தவர்களுக்கும் தெரியும், எனக்குத் துளிக்கூட இனம், மொழி, தேசம், மதம், உறவு என்று எதன் மீதும் புனிதமான அல்லது உணர்வு ரீதியான பிணைப்பு இல்லை என்பது.   பெரும் புனிதங்களாகக் கருதப்படும் இவற்றின் மீதே பிணைப்பு இல்லை என்கிற போது பிறந்த மண் மீது என்ன பிணைப்பு இருக்க முடியும்?  ஆனால் அதற்காக ஒவ்வொரு இருப்புக்கும் உரிய சிறப்புத் தன்மைகளை மறுத்து விட முடியுமா என்ன?  வட கேரளத்தின் பசுமையையும், மழையையும், … Read more

ஒரு கடிதமும் பதிலும்

என்னோடு பழகுவது கடினம் என்று அடிக்கடி சொல்லியிருக்கிறேன். நேர்ப் பழக்கத்திலும் நட்பிலும் எப்போதுமே அறம் கோருபவன் நான். ஒருவர் அவரது வாழ்வில் எப்படிப்பட்டவராகவும் இருக்கலாம். நான் எவ்விதமாகவும் அவரை மதிப்பீடு செய்வதில் ஈடுபடவே மாட்டேன். ஆனால் நட்பில் அறம் சார்ந்து செயல்படுபவராக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஐந்து ஆண்டுப் பழக்கம் உள்ள என் நண்பர் ஒருவரை 40 ஆண்டுப் பழக்கம் உள்ள நெருங்கிய நண்பர் அவமதித்து விட்டார். அந்தப் பழைய நண்பரை என் வட்டத்திலிருந்து விலக்கி … Read more

NTTF: அராத்து: ஃபாத்திமா பாபு : க்ளப் ஹவுஸ் : இன்று இரவு

இன்று காயத்ரியின் ஃபேஸ்புக் பதிவு இது: ”காலத்திற்கேற்ப எல்லாம் மாறும். Literature too! இப்போது பெண்கள் அணியும் உடைகளை 100 ஆண்டுக்கு முந்தைய ஆள் பார்த்தால் இந்தப் பெண்களை எப்படி வர்ணிப்பார்? ஷேக்ஸ்பியரின் ஜூலியட்டின் வயது 13 மட்டுமே. (‘she hath not seen the change of fourteen years’) இக்காலத்தில் அவள் சிறுமி. Similarly, narration too varies from time to time. ‘தி. ஜா. போல், இன்னும் சிலரைப்போலத்தான் explicit material … Read more

அரூபம்: சிறுகதை: காயத்ரி ஆர்.

காயத்ரி எழுதியுள்ள நான்காவது சிறுகதை. இந்த மாதத்திலேயே தொகுப்பு வந்து விடும் போல் இருக்கிறது. பப்ளிஷர் யார்? உயிர்மையா, காலச்சுவடா? விஷ்ணுபுரம் பதிப்பகமா? அப்பாம்மை, நுண்மை, பாதி கதை ஆகிய மூன்றையும் விட அதிகமாக அரூபம் எனக்குப் பிடித்திருந்தது. நுண்மை என்ற கதை பலருக்கும் பிடிக்கவில்லை. பலருக்குப் பிடித்திருந்தது. முதல் பலர் ஆண்களாக இருந்ததும் அடுத்த பலர் பெண்களாக இருந்ததும் தற்செயல் என்று எனக்குத் தோன்றவில்லை. அது இந்த சமூகத்தின் பிரதிபலிப்பு. ‘கலெக்டர் வூட்டுப் பொண்ணு’ என்றாலும் … Read more