எனக்கு இசை

சற்று நேரம் முன்புதான் ஔரங்கசீப் 81-ஆவது அத்தியாயம் எழுதி முடித்தேன்.  பத்துப் பன்னிரண்டு மணி நேர ஆழ்நிலை தியானத்திலிருந்து பிரக்ஞை பெற்று எழுந்தது போல் இருந்தது. பற்களின் ஈறுகளில் கூட மின்னணு பாய்வது போல் இருந்தது.  எட்டு ஒன்பது பெக் ரெமி மார்ட்டின் அருந்திய பிறகு ஒரு இழுப்பு மரியுவானாவை இழுத்தது போல் ஒரு மிதப்பு.  வார்த்தைகளால் விளக்க முடியவில்லை.  நாற்காலியில் அமர்ந்திருப்பதையே உணர முடியவில்லை.  அந்தரத்தில் மிதப்பது போல் இருந்தது.  இந்த உணர்வினால்தான் – இந்த … Read more

என்னுடைய புத்தகங்கள்

என்னுடைய நேரம் அவ்வளவையும் புனைவெழுத்துக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.  அதன் காரணமாக, எனக்கு வரும் கடிதங்களை தளத்தில் வெளியிட்டு பதில் எழுதுவதை நிறுத்தி வைத்திருக்கிறேன்.  ஆனால் கடிதம் எழுதுபவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பதில் எழுதி விடுகிறேன்.  நெருங்கிய நண்பர்களாக இருந்தால் போனில் வாய்ஸ் மெஸேஜோடு சரி.  நேற்று கூட இரவு பதினோரு மணிக்குப் படுத்து நான்கு மணிக்கு எழுந்து ஔரங்கசீப்பில் மூழ்கினேன்.  ஔரங்கசீப்பை முடித்தாலும் நிலைமை இப்படித்தான் இருக்கும்.  முக்கால்வாசி முடித்து வைத்த … Read more

அன்பு என்றால் என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா?

சாரு, இப்போதுதான் உங்களுடைய சாய் வித் சித்ராவில் பார்க்காமல் விடுபட்ட பாகங்களைப் பார்த்து முடித்தேன். உங்கள் பேட்டியில் மற்றவர்கள்மீது உள்ள அன்பினால் செய்வதாக வெவ்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளின் பின்புலத்தில் சொல்லியிருந்தீர்கள். எனக்கு அன்பு என்றால் என்னவென்றே புரிவதில்லை, புரிந்துகொள்ளவும் முடிவதில்லை. பொதுவாகக் கேட்கிறேன், அது நிஜமான ஒன்றா? -ப்ரஸன்னா  ப்ரஸன்னா, தலைக்கு மேல் வெள்ளம் என்ற நிலையில் ஔரங்கசீப்பை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  என்னால் மற்ற எழுத்தாளர்களைப் போல் இரவில் கண் விழிக்க முடிவதில்லை.  ஒருநாள் மாலை … Read more

இன்று க்ளப்ஹவுஸில் ஃபாத்திமா பாபு

இன்று (ஞாயிற்றுக் கிழமை) இரவு 8.50 மணிக்கு ஃபாத்திமா பாபு என்னுடைய ‘வெளியிலிருந்து வந்தவன்’ என்ற சிறுகதையை க்ளப்ஹவுஸில் வாசிக்கிறார். நானும் கலந்து கொள்கிறேன். முடிந்தவர்கள் கலந்து கொள்ளலாம். லிங்க் கீழே. https://www.clubhouse.com/join/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE/WanFmsBv/Md3woJd5

கருட கமனா ரிஷப வாஹனா இயக்குனரிடமிருந்து ஒரு கடிதம்

நேற்று இரவு (15.1.2022) பத்து மணிக்கு கருட கமனா ரிஷப வாஹனா படத்தைப் பற்றிய என் மதிப்புரையை எழுதி பதிவேற்றி விட்டுப் படுத்தேன். காலையில் பார்த்தால் இயக்குனர் ராஜ் பி. ஷெட்டியிடமிருந்து இப்படி ஒரு கடிதம். இதுவுமே கூட தமிழில் நிகழ்வது வெகு அரிது. கேரளத்தில் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள் என்று நான் அடிக்கடி எழுதுவது வழக்கம். ஆனால் கர்னாடகாவில் எழுத்தாளர்கள்தான் சமூக வெளியில் உச்ச நிலையில் இருப்பவர்கள். சிவராம் காரந்த்துக்கும், யு.ஆர். அனந்தமூர்த்திக்கும், எஸ்.எல். பைரப்பாவுக்கும் கன்னடத்தில் … Read more