இன்னா செய்தாரை ஒறுத்தல்…

நாய்க்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.  நாயைக் கல்லால் அடித்தால் குரைக்கும்.  குரைத்து விட்டுப் போய் விடும்.  குரைத்து விட்டோமே என்று குற்ற உணர்ச்சியால் பீடிக்கப்படாது.  நான் படுவேன்.  இப்படி வாரம் ஒருமுறை குரைத்து விட்டு, வாரம் பூராவும் குற்ற உணர்ச்சியால் பீடிக்கப்படுவேன்.  பிறகு அடுத்த வாரம், அடுத்த குரைப்பு.  ஆக, ஒவ்வொரு நாளுமே குற்ற உணர்ச்சியால் பீடிக்கப்பட்டவனாகவே வாழ வேண்டியது என் வரம்.  ஆனால் தினமும் குரைக்க மாட்டேன்.  குரைக்கவே கூடாது என்ற மன உறுதியிலும் … Read more

fall of a sparrow…

நேற்று இரண்டாவது தடவையாக அழுதேன்.  முதல் முறை அழுத்து என் தம்பி ரங்கன் 40 வயதில் செத்த போது.  என்னைப் பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று அழைத்துக் கொண்டே இருந்தான்.  இப்படி செத்துப் போவான் என்று தெரிந்திருந்தால் ஓடிப் போய் பார்த்திருப்பேன்.  பார்க்காமலேயே போய் விட்டான்.  உடம்பு எலும்புக் கூடாக இருந்த்து.  இரண்டு மூன்று மாதங்களாக சாப்பிடவில்லையாம்.  அதற்குப் பிறகு நேற்றுதான் அழுதேன்.  பொதுவாக எந்த மரணமும் என்னை எதுவும் செய்வதில்லை.  அதற்கு விதிவிலக்காக அமைந்து … Read more

the outsider – 7

தெ அவ்ட்ஸைடர் ”Moth to a Flame பாடல் மூன்று தினங்களாக repeat mode இல் இருக்கிறது, தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று எழுதியிருக்கிறார் அன்னபூரணி.  அந்தப் பாடல் படமாக்கப்பட்டிருக்கும் விதம் பற்றியும் என்னைப் பற்றிய ஆவணப் படம் (the outsider) பற்றியும் எழுதியிருந்தேன்.  இனிமேல் ஆவணப் படம் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று கூறி விட்டார் இயக்குனர்.  அவர் சொன்ன காரணம் சரியாக இருந்த்தால் நானும் எழுத வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.  … Read more

விக்ரம் – இன்னும் கொஞ்சம்

என் நண்பர் வினித் ஒரு வினாவை எழுப்பி இருக்கிறார். பாராளுமன்றத்துக்குள் போய் வில்லனைப் போடுவதும் நகரத்தின் நடுவே பீரங்கியைப் பயன்படுத்துவதும் ஒன்றுதான் என்கிறார் வினித். வினித்துக்கு ஒன்று புரியவில்லை. விக்ரம் ஒரு சயன்ஸ் ஃபிக்‌ஷன் படம். அதை லௌகீக தர்க்கம் கொண்டு பார்க்கலாகாது. விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளைப் பார்த்தாலே அது ஒரு சயன்ஸ் ஃபிக்‌ஷன் படம் என்று புரியவில்லையா? மேலும், விக்ரம் படத்தில் நகரம் எங்கே வருகிறது? நரகம் வருகிறது. ஆனால் நகரம் வ்ரவே இல்லை. … Read more

விக்ரம் – விமர்சனம்

விக்ரம் புத்திஜீவிகளுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது.  அவர்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரி இருக்கிறது.  வணிக/பொழுதுபோக்கு சினிமா என்றால் ஒரு பாட்ஷா, ஒரு கில்லி மாதிரியாகவாவது இருக்க வேண்டாமா?  ரசிப்பதற்கான நுணுக்கங்கள் – அவை கலாபூர்வமாக இல்லாவிட்டாலும் ஜனரஞ்சகமாகவேனும் – ஒன்றிரண்டு இருக்க வேண்டாமா?  பொழுதுபோக்கு சினிமா என்றால் அது இப்படியா மொண்ணையாகவும், தட்டையாகவும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஆதங்கம். விக்ரம் எனக்குப் பிடித்தது.  எந்த அளவுக்கு என்றால், தமிழர்களுக்கு எந்த அளவு பிடித்ததோ அந்த அளவுக்கு.  … Read more

முதல் நாள் அனுபவம்

இந்திய நகரங்களிலேயே ஆகக் கொடூரமானது சென்னை.  இந்த நகரத்துக்கு வந்து இதையே தங்கள் வாழ்விடமாகக் கொண்ட எழுத்தாளர்கள் பலர் சென்னையை ஆகா ஓகோ என்று புகழ்ந்து எழுதுவதைக் கண்டு அவர்கள் மீது இரக்கம் கொண்டிருக்கிறேன். எல்லா வகையிலுமே ஆக மோசமான விஷயங்களையும் கலாச்சாரத்தையும் கொண்ட நகரம் சென்னை. இன்று காலை அவந்திகா மும்பை சென்றதும் வீட்டுக்கு வந்தேன்.  வீட்டில் தனியாக இருப்பது புதிய அனுபவம்.  அதிலும் பணிப்பெண்கள் வீட்டு வேலையை முடித்து விட்டால் நான் பாட்டுக்கு எழுத்து வேலையைப் பார்க்கலாம்.  நண்பர்கள் யாரும் … Read more