குருவைக் கண்டடைதல்

இந்த விஷயத்தைப் பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் தன் உடல் நலம் குறித்து அக்கறை கொள்வோர் பலரும் காலையில் நடைப் பயிற்சிதான் செய்கிறார்கள்.  அப்படி நடைப் பயிற்சி செய்தாலும் அறுபது வயதில் பைபாஸ் அறுவை சிகிச்சை அல்லது ஸ்டெண்ட் வைத்துக் கொள்வது போன்றவற்றிலிருந்து தப்பிக்க முடிவதில்லை.  நான் உட்பட.  எனக்கு பதினாறு வயதில் காச நோய் வந்தது.  ஒரு நூற்றியிருபது ஸ்ட்ரெப்டொமைசின் ஊசி போட்டார்கள்.  சரியாயிற்று.  அதன் பிறகு ஐம்பத்தைந்து வயது வரை ஜுரம், தலைவலி, … Read more

பிறந்த நாள் வாழ்த்து

ஜிமெயிலில் உனக்கு இடம் தீர்ந்து விட்டது. இனிமேல் தேவையெனில் பணம் கட்டு. இல்லாவிட்டால் உனக்கு இனி மெயில் வராது. நீயும் மெயில் அனுப்ப முடியாது. இப்படி ஜிமெயிலிலிருந்து ஒரு வாரம் முன்பு கடிதம் வந்தது. அதனால் ஐந்த ஆண்டுகளாக வந்த கடிதங்களைப் படித்து பதில் போட்டுக் கொண்டிருந்தேன். அதில் ஒரு கடிதம் இது. படித்ததும் உற்சாகமாக இருந்ததால் உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். 20 டிசம்பர் 2019 அன்று எழுதப்பட்ட கடிதம். *** சாரு நிவேதிதாவின் எழுத்துகள் அனைத்தையும் … Read more

இன்று ஞாயிறு இரவு எட்டு மணிக்கு நான்தான் ஔரங்ஸேப்… நாவல் பற்றி ஆர். அபிலாஷ்

இன்று ஞாயிறு இரவு எட்டு மணிக்கு நான்தான் ஔரங்ஸேப்… நாவல் பற்றி ஆர். அபிலாஷ் உரையாற்றுகிறார். நான் நன்றியுரை செய்கிறேன். இந்தச் சந்திப்பு தகடூர் புத்தகப் பேரவை சார்பாக நடைபெறுகிறது. முடிந்தவர்கள் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கிறேன். கீழே லிங்க். https://us02web.zoom.us/j/9805204425

on this day…

வர்தா புயல் ஓய்ந்து, வீழ்ந்த மரங்களையும் இலை தழைக் குப்பைகளையும் தமிழகம் முழுவதிலிருந்தும் அழைத்துவரப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்த அந்த சனிக்கிழமை மதியம், நானும் சாருவும் மயிலை Padrino-வில் சாப்பிட்டுவிட்டு அப்பு தெருவுக்கு ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தோம். ஒவ்வொரு சாலையிலும் தெருவிலும் போக்குவரத்து நெரிசல். வெர்னர் ஹெர்ஸாக் விசாரணையைப் பாராட்டி இருக்கிறாரே என சாருவிடம் கேட்டேன். “ஒரு ஐரோப்பியன் இந்தக் குப்பைக் கூளங்களைப் பார்த்து ஆச்சரியப் படலாம். இதல்லவா ஊர் என்று வியக்கலாம். சினிமாவின் auteurs நம் … Read more