ராதிகா சாந்தவனம்

தஞ்சாவூர் ராஜா ப்ரதாப் சிங்கின் போக பத்னியாக விளங்கிய தெலுங்குக் கவியான முத்துப்பழனி (1730 – 1790) எழுதிய ராதிகா சாந்தவனம் என்ற தெலுங்கு நூலை எனக்கு அர்த்தத்துடன் அல்லது அர்த்தம் தவிர்த்துப் படித்துக் காட்டக் கூடிய நண்பர்கள் யாரேனும் இருக்கிறீர்களா? இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும். புத்தகம் என்னிடம் உள்ளது. நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் தியாகராஜா நாவலுக்கு இது தேவைப்படுகிறது. charu.nivedita.india@gmail.com

ஆனி எர்னோ

நீண்ட நாட்களாகப் பேசாமல் இருந்த தோழியிடமிருந்து வந்த அழைப்பை என்னால் எடுக்க முடியவில்லை. பிறகு ஃபோன் செய்து கேட்ட போது ஃப்ரீக் கால் என்றாள். 2. ஆனி எர்னோவின் நாவல் ஒன்றின் முதல் அத்தியாயம் அச்சு அசலாக ஸீரோ டிகிரியின் முதல் அத்தியாயம் போலவே இருக்கிறதாம். ஆனால் அது பற்றி நான் ஒன்றும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. ஆனி எர்னோவின் அந்த நாவல் 1960களிலேயே வந்து விட்டதாம். 3. அபிலாஷ் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்த ஆனி எர்னோவின் இரண்டு … Read more