சினிமாவும் சுவாரசியமும்

ஜனரஞ்சகக் கதைகளோ அல்லது ஜனரஞ்சக சினிமாவோ எப்படித் தொடங்க வேண்டும் என்பதற்குக் கதையிலிருந்தும் சினிமாவிலிருந்தும் ஒவ்வொரு உதாரணம் தருகிறேன்.  தருண் தேஜ்பாலின் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலில் வரும் கதைசொல்லி, ”இன்று இரவுக்குள் என்னைக் கொன்று விடுவார்கள், அதற்குள் நான் என்னுடைய நெடிய கதையை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்” என்று ஆரம்பிக்கிறான்.  எடுத்த எடுப்பிலேயே நம்மைத் தொற்றிக் கொள்கிறது சுவாரசியம்.  கதைகளில் கூட இந்த அம்சம் இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் சினிமாவிலோ நாடகத்திலோ இது இருந்தே ஆக வேண்டும்.  … Read more

ஒரு வாக்குவாதம், ஒரு வேண்டுகோள்…

டார்ச்சர் கோவிந்தனிடம் நேற்று நான் பொன்னியின் செல்வன் படம் பார்த்ததை மறைத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால், நேற்று காலையே அவர் படத்தைப் பற்றி ஏகமாய்ப் புகழ்ந்திருந்தார். ஆனால் சினிமா தெரிந்த மற்ற சில நண்பர்கள் ரொம்பவும் எதிர்மறையாகச் சொல்லியிருந்தார்கள். என்னைப் பொருத்தவரை நீங்கள் என்னதான் சொன்னாலும் அது எதுவுமே என்னை பாதிக்காது. எனக்கும் படத்துக்குமான உறவு ஒன்றுதான் நிற்கும். கமல்ஹாசனின் விக்ரம் படத்தையே நான் ஆஹா ஊஹூ என்று பாராட்டவில்லையா? பொழுதுபோக்குப் படம் … Read more