அந்நியன் (15)
கான்ஸெப்ஸியோன் செல்வதற்காக லித்தினும் அவரது ஒளிப்பதிவாளரும் சாந்த்தியாகோவின் எஸ்தாஸியோன் செந்த்ராலிலிருந்து (Estación Central) இரவு பதினோரு மணி ரயிலைப் பிடிக்கிறார்கள். இந்த ரயில் நிலையம் எஃபெல் டவரை உருவாக்கிய குஸ்தாவ் எஃபெல் நிர்மாணித்தது என்பதால் இந்த ரயில் நிலையத்தில் யாருமே இனிமேல் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்ற அளவில் இது ஒரு தேசியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீலேயில் பினோசெத்தின் ஆட்சியில் இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தது. யார் நடமாடினாலும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, … Read more