பிரச்சினை

என் இளம் தோழி சொன்னாள் என் நண்பர்கள் பலர்  அவளுக்கு நட்பு விண்ணப்பம் அனுப்புவதாக அதில் என்ன தப்பு என்றேன் வேறு யாருமே எனக்கு நட்பு விண்ணப்பம்  அனுப்புவதில்லை என்றாள் ஏன் என்றேன் ஃபேஸ்புக்கில் நானொரு ஃபேக் ஐடி  மட்டுமல்லாமல் அங்கே  நீங்கள் ஒருவர்தானே என் நண்பர்  என்றாள்

எனது வாழ்வைக் கவிதையாய் மாற்றினாய்!

மீள் பிரசுரம் ஜூலை 31, 2004 இளம் பிராயத்தில் நான் வாசித்த ஒரு புத்தகமே என் வாழ்வின் போக்கை முழு முற்றாகத் திசை திருப்புவதற்கும் காரணமாக அமைந்தது. அந்தப் புத்தகம், சேகுவாரா எழுதிய பொலிவிய நாட்குறிப்புகள். அதன் பிறகு, லத்தீன் அமெரிக்கா சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் அதன் மீது தீராக் காதல்கொண்டு அதிலேயே என்னை ஆழ்த்திக்கொள்ள ஆரம்பித்தேன். லத்தீன் அமெரிக்க சினிமா, அரசியல், விடுதலை இறையியல், கால்பந்து, ஸல்ஸா, ஸான்டினிஸ்டா, மெரெங்கே என்று அந்தப் பட்டியல் வெகு … Read more