two intoxicants…
படங்களும் கருத்தும்: ஸ்ரீ
படங்களும் கருத்தும்: ஸ்ரீ
இந்து என்ற பெயர் விவகாரம் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். சிந்துவை அரபி மொழி பேசுபவர்கள் ஹிந்து என்று அழைத்தார்கள். சிந்து நதியைத் தாண்டி – அதாவது, அரபிகளின் பார்வையில் – வாழ்பவர்கள் ஹிந்துக்கள். ஆக அராபிய முஸ்லிம்கள் வைத்த பெயரே ஹிந்து. அதற்காக, அதற்கு முன்னால் ஹிந்து மதமே இல்லை என்று சொல்வது மட்டித்தனத்தைத் தவிர வேறு இல்லை. ஆப்பிளுக்கு ஆப்பிள் என்று பெயர் வைக்காதிருந்தால் ஆப்பிளே இல்லை என்று சொல்லும் மட்டித்தனம்தான் ராஜராஜன் இந்து இல்லை … Read more
கீழே உள்ள பேட்டியை கவனமாகப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். காரணம், எழுத்தாளர்களின் மனைவிகள் எழுத்தாளர் தேக வியோகம் அடைந்த பிறகு கொடுக்கும் பேட்டிகள் ஒருசிலவற்றை வாசித்திருக்கிறேன். அந்தப் பேட்டிகள் எதுவும் என்னைக் கவர்ந்ததில்லை. காரணம், மனைவி என்ற பெண் எழுத்தாளனோடு கூடவே வாழ்ந்தாலும், கணவனை அவள் ஒரு எழுத்தாளனாக உள்வாங்குவதில்லை. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருந்தாலும் பொதுவான நிலைமை நான் மேலே குறிப்பிட்டதுதான். உதாரணமாக, சி.சு. செல்லப்பா தன் உரையில் சொல்வது போல, அவர் கு.ப.ரா.வுடனும் சிதம்பர சுப்ரமணியனுடன் … Read more
சென்ற ‘இலக்கிய வட்டம்’ அரங்கில் எதுக்காக நான் எழுதுகிறேன் என்பதற்கு என்னால் திருப்தியாக விளக்கம் தரமுடியவில்லை என்று கூறி முடித்தேன். ஏனென்றால் எழுதவைக்க, தூண்டும் சக்தி அல்லது சக்திகள் எவை என்று திட்டமாக வகுத்துக்காட்ட முடியாது. எழுதுகிற ஒவ்வொருவரும் ஒரு சக்தியை குறிப்பிட்டாலும் பல சக்திகளைச் சுட்டிச் சொன்னாலும் இத்தனையோடும், கூட ஏதோ ஒன்று (Plus One) இருக்கிறது என்பதுதான் படுகிறது எனக்கு. இந்த எதோ ஒன்று என்பது படைப்பாளியின் பரவச நிலையிலே எழுவது. இந்தப் பரவச நிலை ஒருவனுக்கு ஏற்படாது போனால் அவன் படைப்பாளி ஆகமுடியாது. அருள் என்ற வார்த்தையைக்கூட … Read more
அன்பின் சாரு! இந்த ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு Annie Ernauxவுக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு இலக்கியம், வாழ்க்கை குறித்து அதிகம் பேசிய தாங்கள் இதைக் குறித்து ஏதும் சொல்லுங்களேன்… நன்றி கொள்ளு நதீம் ஆம்பூர். அன்பு நதீம், எட்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் ரவிக்குமாரிடமிருந்து (விடுதலைச் சிறுத்தை) ஒரு தொலைபேசி அழைப்பு. ”ஒரு ஃப்ரெஞ்ச் எழுத்தாளருக்கு நோபல் அறிவித்திருக்கிறார்கள். அவர் எப்படி?” என்று கேட்டார். அப்போது நான் பாத்ரிக் மோதியானோ பற்றிக் கேள்விப்பட்டதில்லை. ஃப்ராங்கஃபோன் … Read more
வரும் பதினாறாம் தேதி ஓசூரில் நான்தான் ஔரங்ஸேப் நாவல் பற்றிய மதிப்புரை சந்திப்பு நிகழ உள்ளது. அந்தத் தேதியில் நான் தாய்லாந்தில் இருப்பேன். அதனால் கலந்து கொள்ள இயலாது. முடிந்தவர்கள் கலந்து கொள்ளுங்கள். விலாசம் அழைப்பிதழில் உள்ளது.