சென்னை (மூன்றாவது அத்தியாயம்)

ஒரு நடிகை வாய்ஸ் மெஸேஜ் அனுப்பியிருக்கிறார், ஏன் உங்கள் மனைவி சென்னையை விட்டு வெளியூர் போக மறுக்கிறார்? மிக நீண்ட பதிலைக் கோரும் ஒரு கேள்வி.  முதல் விஷயம், அவளுக்கு சென்னை பற்றி என் அளவுக்கு எந்த வெறுப்பும் கிடையாது.  அதற்குக் காரணம், அவளுக்கு சென்னை தவிர வேறு எந்த ஊரும் தெரியாது.  மேலும், இங்கேதானே அவளுடைய பெற்றோர் கிற்றோர் எல்லாமே இருக்கிறார்கள்?  இதுதானே அவள் வாழ்ந்த வளர்ந்த ஊர்?  இதை விட்டுவிட்டு அவள் கோயம்பத்தூர் சென்றால், … Read more

சென்னை (மீண்டும்…)

தெறிக்க விட்டிருக்கிறார்கள் சென்னையின் காதலர்கள்.  குடித்து விட்டு வந்து தினந்தோறும் உதைக்கும் கணவனையும் பெண்டாட்டி “எம் புருஷன் தங்கம்ல” என்று சொல்லும் கதைதான்.  ஹைதராபாதில் சென்னை அளவுக்கு யாரும் ஏமாற்றுவது இல்லை.  ஒரு சிங்கிள் டீ அங்கே ஏழு ரூபாய்.  குடிப்பதற்கு தேவாம்ருதமாக இருக்கிறது.  இங்கே சென்னையில் கழுதை மூத்திரம் மாதிரி இருக்கும்.  பத்து ரூபாய்.  காஃபி பன்றி மூத்திரம் மாதிரி இருக்கும்.  முப்பது ரூபாய்.  வீடு வாடகைக்குப் பார்த்தால் பத்து மாத முன்பணம்.  வாடகை ஐம்பது … Read more

சென்னை

சென்னை பற்றி போகன் சங்கர் எழுதியிருந்த எதிர்மறையான கருத்துகளை வாசித்தேன்.  இப்போதுதான் முதல்முறையாக ஒரு எழுத்தாளர் சென்னை பற்றி இப்படி எதிர்மறையாக எழுதுவதைப் படிக்கிறேன்.  இதுவரை எனக்குத் தெரிந்து சென்னை பற்றி எழுதியவர்கள் அத்தனை பேரும் இந்த நகரின் அருமை பெருமைகளைப் பற்றி எழுதியதைத்தான் படித்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.  அது அவர்களின் ஸ்டாக்ஹோம் ஸிண்ட்ரம் என்று புரிந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.  சாக்கடையில் வசிக்கும் எலிகளுக்கு அந்த சாக்கடை சொர்க்கமாகத் தெரிவதைப் போலவேதான் இதுவும்.  மற்றபடி சென்னை … Read more

விஷ்ணுபுரம் விருது விழா அறிவிப்பு

நண்பர்களே, 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நிகழ்கிறது. வருவதற்கு பயணமுன்பதிவு செய்பவர்கள் செய்துகொள்ளலாம். விருந்தினர்களின் பட்டியல் இன்னமும் அறுதி செய்யப்படவில்லை. நண்பர்கள் வழக்கம்போல நன்கொடை வழங்கவேண்டும் என்று கோருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பாளர்களும் நிகழ்ச்சிகளும் பெருகிக்கொண்டே செல்கின்றன. இது இன்று தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கியவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது. மிகமிகக்குறைந்த செலவில் இதை நடத்துகிறோம் என்றாலும்கூட இதற்கான செலவுகள் மிகுதி. நாங்கள் தனிப்பட்ட முறையில் எவரிடம் சென்று , … Read more