எனக்கு நோபல் கிடைக்காததன் காரணம் என்ன?

நான் என்ன மாதிரியான சூழ்நிலையில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை ஆயிரம் கட்டுரைகளில், பல கதைகளில் எழுதி எழுதி எழுதி விளக்கி விட்டேன். ஒரு ஐந்து நிமிடம் முன்னாடி ஒரு நண்பர் செல்வாவின் நம்பர் என்ன என்று கேட்டு எனக்கு மெஸேஜ் பண்ணியிருக்கிறார். நம்பர் கேட்ட நண்பரை நம்பித்தான் நான் வெளியூரே போகிறேன். நம்பர் கேட்ட நண்பரால்தான் எனக்குப் பல காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நம்பர் கேட்ட நண்பருக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். அதற்காக என்னை இப்படி மன … Read more

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்…

என்னைச் சந்திக்கும் நண்பர்கள் என்னோடு உடன்படாத விஷயங்களை அப்படியே விட்டு விடுங்கள். ஜெயமோகனின் வாசகர் என்று சொல்லிக் கொண்ட ஒருவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் வைத்து என்னிடம் அப்துல் கலாம் எவ்வளவு சிறந்த சிந்தனையாளர் என்று வாதிட்டு எனக்குக் கடுமையான நெஞ்சுவலியை உண்டாக்கி விட்டார். இரண்டு மணி நேரம் வலியால் துடித்தேன். அந்த வலியில் நான் இறந்தும் போக வாய்ப்பு இருக்கிறது. தர்மு சிவராமு மாதிரி வெளியே போடா நாயே என்று சொல்லியிருக்க வேண்டும். … Read more

சூஃபித்துவமும் எழுத்தும்…

பாரசீகக் கவிகள் ஹஃபீஸ், ரூமி மற்றும் இந்தியக் கவி மீர்ஸா காலிப் போன்றவர்களின் கவிதைகள் உலகப் புகழ் பெற்றவை.  அவற்றைப் படிக்காத, அவற்றைக் கடந்து வராத – அதிலும் குறிப்பாக மீர்ஸா காலிபை அறியாதவர் இருக்க சாத்தியம் இல்லை.  இந்த மூவரின் கவிதைகளிலும் வைன் ஒரு படிமம். அடிக்கடி தென்படும் படிமம்.  இந்த மூவரில் காலிப் மதுவிலேயே தோய்ந்தவர்.  மதுவிலேயே வாழ்ந்தவர். என் எழுத்தை நண்பர்கள் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் எழுத்தோடு ஒப்பிடுவது வழக்கம்.  ஆனால் இரண்டு பேருக்கும் … Read more