நம்முடைய ஆன்மீக சக்தியைப் பிறர் உறிஞ்சி எடுப்பதிலிருந்து தப்பிப்பதற்கான எளிய உபாயம் (ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் கதை)

டிசம்பர் பதினேழு பதினெட்டு தேதிகளில் விழா.  பதினாறாம் தேதி பத்தினியின் பிறந்த நாள் என்பதால் பதினாறாம் தேதியே கோயம்பத்தூர் கிளம்ப முடியாது.  நான் எந்த நாட்டில் எந்தப் பட்டணத்தில் இருந்தாலும் டிசம்பர் பதினாறிலிருந்து பதினெட்டு வரை ஊரில் – வீட்டில் – இருந்தாக வேண்டும்.  பதினெட்டு?  அது அடியேனின் பிறந்த நாள்.  ஆக, மூன்று தினங்களும் என்னைப் பொருத்தவரை வெளியுலகம் மூடப்பட்டது.  இப்படித்தான் கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக நடந்து வருகிறது.    விழா அமைப்பாளரிடமிருந்து அழைப்பு வந்தது.  … Read more

கனவு, வைன், யோகா கதையில் விடுபட்டது

கனவு, வைன், யோகா என்ற நேற்றைய கதையில் விடுபட்ட சில பகுதிகளை இப்போது தருகிறேன்.  எனக்கு வரும் கனவுகளில் முக்கியமான இரண்டு கனவுகள் விடுபட்டு விட்டன.  ஒன்று, மனித நரகல் சம்பந்தப்பட்டது.  அதற்குக் காரணம், மெரீனா பீச்சும் என்னோடு பழகிய பெண்களும்.  நீங்களே கவனித்துப் பார்க்கலாம்.  ஓ, கவனித்துப் பார்க்கலாம் என்பதை அப்படியே அர்த்தப்படுத்திக் கொண்டு உற்று கவனித்தீர்களானால் வெளிநாடுகளில் உங்களைப் பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்.  அதனால் கவனிக்காதது போல் கவனியுங்கள்.  பெண்கள் மட்டும்தான் கடல் … Read more