பரிவாரம் (சிறுகதை) : காயத்ரி ஆர்.
‘இவனை, இந்த ஷ்யாமை, எப்படி உனக்குத் தெரியும்? உன் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கானே பொறுக்கி’ என்று குமுதா சொன்னபோது பக்கத்தில் நான் இருந்தேன். ரம்யா திடுக்கிட்டது தெரிந்தது. கண்ணால் ஏதோ குமுதாவுக்குச் சொல்ல முற்பட்டாள் ரம்யா. குமுதா புரியாமல் புருவத்தை சுருக்கிக்கொண்டு தாடையை முன் நீட்டி ‘ஹ(ன்)’ என்றாள். தலையிலடித்துக்கொள்ள முடியாதபடி எதுவும் பேச இயலாதபடி ‘ஹி ஹி…சரி, சரி, அப்புறம்…’ என்று சங்கடத்துடன் பேச்சை ரம்யா மாற்றத் தொடங்கியபோது நான் இடைமறித்தேன். ‘யார்?’ என்று குமுதாவைக் … Read more