நரமாமிசப் பட்சிணி (கடவுள் கவிதைகள் 3)

கடவுளோடு பரிச்சயம் உள்ளவரிடம் மட்டும் கேட்கிறேன் நாத்திக வாதிகள் தலையிட வேண்டாம் கடவுள் நரமாமிசப் பட்சிணியா என் இல்லம் வந்த கடவுள் இன்றென்ன செய்தார் தெரியுமா தன்னிரு கைகளாலும் என் கரமொன்றைப் பற்றிக் கொண்டார் கொஞ்சமும் சலிப்பின்றி அரைமணி நேரம் தின்று கொண்டேயிருந்தார் பற்றியயென் கரத்தை நல்லவேளை பொக்கைவாயென்பதால் தப்பினேன் இல்லாவிட்டால் கை போயிருக்கும்

அஞ்சு மாச சாமி (கடவுள் கவிதைகள் – 2)

மூன்று நாட்களாக சாமிக்குப் பூ போடவில்லை என்றாள் பத்தினி சாமியைத்தான் தினமும் குளிப்பாட்டுகிறாய் சாம்பிராணி போடுகிறாய் சாம்பிராணி போடுவதற்காக கொட்டாங்கச்சியைத் தகதகவென தகிக்க வைக்கிறாய் சாமிக்குப் பாலூட்டுகிறாய் மலஜலம் நீக்கி சுத்தம் செய்கிறாய் தூங்க வைக்கிறாய் திருஷ்டி சுற்றிப் போடுகிறாய் சாமி அழுதால் அனிருத்தின் Wasted போட்டு சாமியைக் குதியாட்டம் போட வைக்கிறாய் அஞ்சு மாச சாமி வந்து உன் மனசைப் பஞ்சாக்கிய பின்னும் பூ வேறு போடணுமா கண்ணே?

அவ்ட்ஸைடர் பற்றி…

பொதுவாக எனக்குப் பணம் அனுப்புபவர்களின் பெயரை நான் வெளியிடுவது இல்லை.  அது சம்பந்தப்பட்டவர்களுக்கு இடைஞ்சலைத் தருகிறது என்பதால்.  ஆனால் என் அன்புக்குரிய நண்பர் நேசராஜ் செல்வத்தின் (கிருஷ்ணகிரி) இந்தக் குரல் செய்தியை அப்படியே உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.  ஏனென்றால், நான் உண்மையிலேயே சொல்கிறேன், த அவ்ட்ஸைடர் தொடர் அளவுக்கு உணர்வுபூர்வமாக நான் வேறு எதையுமே எழுதியதில்லை.  ஸீரோ டிகிரி மட்டுமே விதிவிலக்கு.  ஆக, அவ்ட்ஸைடரை யாரும் படிக்கிறார்களா, அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து … Read more

வல்லீர்கள் நீங்களே!

திருப்பாவையின் பதினைந்தாவது பாடல் எல்லே இளங்கிளியே என்று தொடங்கும்.  அதில் ஒரு கருத்து உண்டு.  வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக. நீங்களே வலிமையானவர்கள், நானே தோற்றவளாக இருந்து விட்டுப் போகிறேன் என்று பொருள்.  இதுதான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என் வாழ்வியல் தத்துவம்.  இதுதான் இந்தியத்துவம்.  இதுதான் இந்தியாவின் ஆன்மா.  நான் எப்போதுமே சொல்லி வருகிறேன், நான் ஒரு ஐரோப்பியனாக வாழ்கிறேன் என்று.  ஆனால் அடி ஆழத்தில் இந்த இந்தியத்துவம்தான் என் சுவாசமாக இருக்கிறது.  இந்தியர்களிடம் … Read more