தூக்கம்

தூக்கம் பற்றி ஜெமோ மற்றும் சாரு எழுதிய கட்டுரைகளை வாசித்தேன். தூக்கத்தில் கூட இரண்டு ஆளுமைகளும் எதிரெதிர் துருவங்களில் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள் தூக்கம் என்பது புணர்ச்சியைப்போல பர்ஸனலான ஒன்று. இன்னும் கேட்டால் புணர்ச்சியை விட ரொம்ப பர்ஸனலானது. புணர்ச்சிக்கு இன்னொருவர் தேவையல்லவா ? நான் இப்படித்தான் மேட்டர் செய்வேன் , அதனால் எல்லோரும் இப்படி மேட்டர் செய்வதுதான் சிறந்தது என்று எப்படி கூற முடியாதோ , அதே போல இப்படி தூங்குவதுதான் சிறந்தது என்று கூற முடியாது … Read more

இரண்டு கடிதங்களும் ஒரு பதிலும்

சாரு எழுதிய இரண்டு ஆட்டோ ஃபிக்‌ஷன் கதைகளை படித்தேன். தமிழில் அட்டோ ஃபிக்‌ஷன் சாருவுக்கு முன்பு யாரும் எழுதியதில்லை; சாருவுக்குப் பிறகும் யாரும் எழுதப் போவதில்லை என்று தோன்றுகிறது. அப்படியே எழுதினாலும் இந்தக் கதைகளுக்கு அருகில் கூட வர முடியாது எனச் சொல்லலாம். ஏன் சாருவுக்குப் பிறகு அட்டோ ஃபிக்‌ஷன் சாத்தியமில்லை? ஒட்டு மொத்த சமூகமும் வெகுஜனக் கலாச்சாரத்துக்குள் இருக்கிறது. இதில் வாழ்வில் நடக்கும் அபத்தங்களை அல்லது அங்கதங்களை அல்லது நேர்மறையான செயல்களை நெருங்கிப் பார்த்து திளைத்தல் … Read more

கலாச்சார அவலம்

ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச், அரபி போன்ற மொழிகளின் இலக்கியத்தோடு ஒப்பிட்டால் தமிழ்தான் உச்சபட்ச நிலையில் இருக்கிறது.  இதை சர்வதேச இலக்கியத்தின் தீவிர வாசகன் என்ற முறையில் என்னால் அறுதியிட்டு சொல்ல முடியும்.  (இந்தப் பட்டியலில் நான் ஆங்கிலத்தைச் சேர்க்கவில்லை.  அந்த மொழியில் இன்று சீரிய இலக்கியம் படைக்கப்படுவதில்லை.)  தமிழ் இலக்கியத்தின் சாதனைகள் சர்வதேசத் தரத்தில் இருந்தும் அதை வெளியுலகத்துக்கு எடுத்துச் சொல்ல தமிழில் ஒரு ஆள் இல்லை.  பிராமணர்கள் இலக்கியத்தைத் துறந்து விட்டார்கள்.  அவர்கள் துறந்தது இலக்கியத்தை மட்டும் … Read more