உலகக் கால்பந்தாட்டப் போட்டி

எக்கச்சக்கமான வேலைகளுக்கு இடையில் உலகக் கால்பந்தாட்டப் போட்டிகளையும் பார்த்து வருகிறேன்.  எல்லாவற்றையும் பார்ப்பதில்லை.  ஒரு நாளில் ஒரு போட்டி.  இதில் என்னுடைய மனச்சாய்வு எப்படி இருக்கிறது என்றால், கத்தாருக்கும் எகுவாதோருக்கும் என்றால் என் ஆதரவு எகுவாதோர்.  காரணம், தென்னமெரிக்கா.  இங்கிலாந்துக்கும் ஈரானுக்கும் என்றால், இங்கிலாந்து.  செனகல் – நெதர்லாண்ட்ஸ் என்றால் சொல்லவே தேவையில்லை, செனகல்.  யு.எஸ். – வேல்ஸ் : இரண்டுக்குமே ஆதரவு இல்லை.  ஆட்டத்தையே பார்க்கவில்லை.  இரண்டு நாடுகளையுமே பிடிக்காது.  அர்ஹென்ந்த்தினா – சவூதி அரேபியா … Read more

கடவுளின் ஜாதகம் (கடவுள் கவிதைகள் 4)

அஞ்சு மாச வயசான கடவுள் ஒரு இசை வெறியர் என்று தெரிந்தது கவனம் பிசகாமல் மணிக்கணக்கில் இசை கேட்கிறார் அதனால் கடவுளை நான் இசைக் கலைஞனாக்குவேன் என்றானொருவன் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் சலிப்பே இல்லாமல் கடவுள்தன் கையையும் காலையும் உதைத்துக் கொண்டேயிருக்கிறார் அதனால் கடவுளை நான் நாட்டியக்காரனாக்குவேன் என்றானொருவன் எந்தக் காரணமும் தேவையில்லாமலேயே கடவுளை நான் அய்ப்பீயெஸாக்குவேன் என்றாளொருத்தி கடவுளை நான் தத்துவவாதியாக்குவேன் என்றானொரு தத்துவவாதி எந்தக் குறுக்கீடும் இல்லாமல் புத்தகங்களையே பார்த்துக் கொண்டிருப்பதால் … Read more

அம்மாள்!

சென்னையின் கலாச்சார அவலங்களில் ஒன்று, ஹிண்டு ஆங்கில நாளிதழ்.  அதில் உள்ள யாருக்குமே சமகாலத் தமிழ் இலக்கியவாதிகள் யாரையும் தெரியாது.  ஒரே விதிவிலக்காக இருந்தவர் அசோகமித்திரன்.  அவர் காலத்திலும் சரி, அவருக்குப் பிறகும் சரி, ஆங்கில ஹிண்டு ஆட்களுக்குத் தெரிந்த இலக்கியவாதிகள் சுஜாதாவும் பாலகுமாரனும்தான்.  அதன் காரணமாக அந்தப் பத்திரிகை நடத்தும் இலக்கிய விழாவிலும் வெளிமாநில எழுத்தாளர்களைத்தான் பார்க்கலாமே தவிர தமிழ்நாட்டிலிருந்து ஒருவரும் தென்பட மாட்டார்கள்.  ஒப்புக்கு ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள்.  அவர்களும் நாகர்கோவில் பத்திரிகை கோஷ்டியைச் … Read more