the outsider – 26

செப்டம்பர் 15, திங்கள் கிழமை.  சாந்த்தியாகோவின் வீட்டுக்கு வந்த ரமோன் கட்டிடத் தொழிலாளிக்கான உடுப்பை அணிந்து கொண்டான்.  இருவரும் சேர்ந்து ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் எடுத்து ட்ரக்கில் போட்டார்கள்.  வழக்கம் போலவே ட்ரக் கிளம்பும்போது பிரச்சினை கொடுத்தது.  ஆனால் நான்காவது, ஐந்தாவது முயற்சியில் கிளம்பியது.  ஆஸ்வால்தோ தன் வாக்கி டாக்கியை எடுத்து சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு பெட்டிக் கடைக்குக் கிளம்பினான்.  ஆர்மாந்தோ வரும் வழியிலேயே ஒரு இடத்தில் காரை நிறுத்தி சாந்த்தியாகோ, ரமோன் மாதிரியே தானும் கட்டிடத் … Read more

கோவில்பட்டிக்கு வரச் சொல்லுங்கள்! (தகவல் தொடர்பு கட்டுரையின் தொடர்ச்சி)

அன்புள்ள நண்பருக்கு, உங்கள் வாட்ஸப் மெஸேஜ் கிடைக்கப் பெற்றேன்.  மன்னித்து விடும்படி எழுதியிருந்தீர்கள்.  மன்னிக்கும் அளவு பெரிய தவறு அல்ல உங்களுடையது.  நான் ஃபோன் செய்தேன்.  உங்களால் எடுக்க முடியாத நிலை.  பிறகு பதிலுக்கு ஃபோன் செய்ய மறந்து போனீர்கள்.  இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது?  உண்மையில் மன்னிப்பு என்பதன் அர்த்தம் “இனிமேல் இப்படி நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்வேன்” என்பதுதானே?  ஆனால் அதற்கான தேவையே இனிமேல் எழாதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்.  நான் உங்களுக்கு ஃபோன் … Read more

the outsider (25)

பலவிதமாக ஆலோசித்தார்கள் கமாண்டோக்கள்.  அதில் ஒரு யோசனை: ஒரு ட்ரக்கை வாங்கி, அதில் ஆயுதங்களை வைத்து மேலே காய்கறிகளால் மூடி விடுவது.  ஒவ்வொரு வீடாகப் போய் காய் வேண்டுமா என்று கேட்பது.  இலக்கு வெளியே வரும்போது ட்ரக்கில் இருந்தபடியே தாக்குவது.  உடனே ஒரு சந்தேகம் வந்தது, சொமோஸாவின் பென்ஸ் குண்டு துளைக்காத காராக இருந்தால்? மேலும், ட்ரக் என்றால் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும்.  எனவே ட்ரக் யோசனை உடனடியாகக் கைவிடப்பட்ட்து.  என்ன செய்ய வேண்டும் என்றால், யாருடைய … Read more