ராஜபாளையம் சந்திப்பு: வரும் ஞாயிற்றுக்கிழமை

சுதந்திரச் சிந்தனை அமைப்பின் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை என்னுடைய உரையும் கலந்துரையாடலும் ராஜபாளையம் ஆனந்தா ஓட்டல் மாடியில் நடக்க உள்ளது. பாம்பே சில்க்ஸ் எதிரில். இது சுதந்திரச் சிந்தனையின் நாற்பத்தாறாவது நிகழ்வு. ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள நண்பர்கள் நிகழ்ச்சிக்கு வர முயற்சி செய்யுங்கள். தொடர்புக்கு கந்தசாமி பாண்டியன் 96292 22201. நிகழ்ச்சிக்கு நானும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனும் வினித்தும் வருகிறோம். சனிக்கிழமை காலை ஸ்ரீவில்லிபுத்தூர் … Read more

நாவல் – எழுத்து = விலக்கப்பட்டவற்றால் கட்டமைக்கப்படுகிற எச்சம் : நாகார்ச்சுனன் (எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவல் மீதான மதிப்பீடு)

(ஜெயமோகன் தளத்தில் என் எழுத்து பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து வருகின்றன. அதோடு கூட ரொம்ப காலம் முன்பு என் எழுத்து பற்றி வந்த கட்டுரைகளையும் ஜெ. தளத்தில் வராத கட்டுரைகளையும் இங்கே மீள்பதிவு செய்கிறேன். பின்வரும் கட்டுரை என்னுடைய எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலுக்கு நாகார்ச்சுனன் எழுதிய மதிப்புரை. இப்போதைய எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் புத்தகத்தின் கடைசியில் இந்தக் கட்டுரை வந்துள்ளது. அந்த விவரம் கூட யாருக்கும் தெரியவில்லை. இதை வெளியிட அனுமதி அளித்த நாகார்ச்சுனனுக்கு நன்றி. … Read more

கால் பந்தாட்டம் ஒரு அரசியல் நிகழ்வு

6.12.2022 அன்று நடந்த மொராக்கோ – ஸ்பெய்ன் கால்பந்தாட்டம் பார்த்தேன். கால் பந்தாட்டம் எனக்கு விளையாட்டு மட்டும் அல்ல. அரசியலோடு தொடர்பு உடையது. உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க ஏன் நான் யாரும் ஈடுபாடு காண்பிக்காத மொராக்கோ என்ற ஒரு நாட்டைத் தேர்ந்தெடுத்து, அங்கே எழுதப்படும் இலக்கியத்தை ஒரு முப்பது ஆண்டுக் காலமாகப் படித்து அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தேன்? ஏன் ஜான் ஜெனே ”நான் இறந்து போனால் என் பிரேதத்தை ஃப்ரான்ஸில் புதைக்காதீர்கள், மொராக்காவிலேயே புதையுங்கள்” என்று சொன்னார்? … Read more

சாருவின் உலகத்திற்கு ஒரு சாவி – காயத்ரி.ஆர்

என்னுடைய எழுத்தின் மீது பலருக்கும் ஒவ்வாமை இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதையும் மீறி என் எழுத்தை நெருங்குவதற்கான ஒரு திறவுகோல் காயத்ரியின் இந்தக் கட்டுரை. நீங்கள் இதுகாறும் கற்று வைத்திருப்பதை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு சாருவின் எழுத்திற்குள் நுழையுங்கள் என்ற வாக்கியம் இந்தக் கட்டுரையில் மிகவும் முக்கியமானது. ஒரே ஒரு கருத்தில் மட்டும் முரண்படுகிறேன். நான் நேரில் பழகுவதற்கு மிகவும் இனிமையானவன் என்று பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன். சாருவின் உலகத்திற்கு ஒரு சாவி – … Read more