the outsider: அவசர உதவி தேவை

என்னுடைய முப்பது ஆண்டுக் கால நண்பர் இப்போது திடீரென்று ஒரு காரியம் பண்ணி விட்டார். அவருக்கு அதற்கான சூழல் என்னவென்று தெரியவில்லை. நடந்தது இதுதான். தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற எடிட்டர். அவ்ட்ஸைடருக்கு படத் தொகுப்பு (எடிட்டிங்) செய்து கொடுப்பதற்கு மிகவும் ஆர்வத்துடன் முன்வந்தார். என் வீட்டுக்கே வந்தார். நவம்பர் 15 கடைசி தேதி அன்று எனக்கு படம் கிடைத்து விட வேண்டும் என்றேன். ஒப்புக் கொண்டார். எளிதில் முடித்து விடலாம் என்றார். மணிக்கணக்கில் ஃபோனிலும் நேரிலும் … Read more

சாரு நிவேதிதா – வாழ்வும் கலையும் : அய்யனார் விஸ்வநாத்

நண்பர் அய்யனார் விஸ்வநாத் எழுதி, ஜெயமோகனின் தளத்தில் வெளியான கட்டுரை. படிக்கும் போது ரொம்பவும் லஜ்ஜையாக இருந்தது. இதை இங்கே பகிர வேண்டுமா என்று தயங்கினேன். ஆனாலும் என் எழுத்தை மட்டுமே அறிந்தவர்களுக்கு இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் மற்ற விஷயங்கள் என் எழுத்தை அணுகுவதற்கு உதவியாக இருக்கும் என்றே இதைப் பகிர்கிறேன். ஜெ. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் ஆன்மீகத்தில் நேரடிச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள். Activists. அவர்களது ஆன்மீகச் செய்திகளோடு கூடவே அவர்களின் வாழ்வும் ஒரு … Read more

குப்பை

ரேமண்ட் கார்வர் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளிடையேயும் இலக்கிய வாசகர்களிடையேயும் ஒரு சூப்பர் ஸ்டார். நான் இதுவரை அவரைப் படித்ததில்லை. படிக்க விரும்பியதும் இல்லை. ஏதாவது ஒரு காரணத்தால் என்னோடு பிணைக்கப்பட்டால்தான் ஒரு எழுத்தாளனை வாசிக்க ஆரம்பிப்பேன். ஏதாவது ஒரு விதத்தில் அந்தப் பிணைப்பு ஏற்பட வேண்டும். ஒரு இளம் தோழி – என் வாழ்விலே அப்படி ஒரு அழகியை அத்தனை அருகில் நான் கண்டதில்லை – முராகாமியோடு எனக்கு ஒருமுறையாவது படுக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் சொன்ன போது … Read more

பிணந்தின்னிகள் இயம்பும் நட்சத்திரங்களின் செய்தி: சுனில் கிருஷ்ணன்

என்னுடைய சிறுகதைத் தொகுதி நேநோவை முன்வைத்து நண்பர் சுனில் கிருஷ்ணன் எழுதிய கட்டுரை இன்று ஜெயமோகனின் தளத்தில் வெளிவந்துள்ளது. இன்றைய தினம் எழுத்தாளர்களுக்கு விருது என்பது அதிக அளவில் நடந்து கொண்டிருக்கும் ஒரு சம்பவம். நான் அதை விமர்சிக்க மாட்டேன். எல்லோரும் நல்ல எண்ணத்தில் செய்கிறார்கள். ஒரு நல்ல மனிதர் நூறு பேருக்கு விருது வழங்குகிறார் என்று கேள்விப்பட்டேன். அதுவும் நல்ல விஷயம்தான். ஆனால் இந்தக் காரியத்தை இன்னும் எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்றால், விஷ்ணுபுரம் வாசகர் … Read more