நரகத்தின் வாசலில் நின்று…

டியர் சாரு, இன்றும் கூட மனம் மிகுந்த சஞ்சலத்தோடு இருந்தது. பல குரல்கள் என் மூளையில் கேட்டுக்கொண்டே இருந்தன. உடம்பு பூராவும் பயத்தினால் ஆட்பட்டு அந்த பயம் பரவிக் கொண்டே இருந்தது. எனது அன்றாட அலுவலக, வீட்டு வேலையை செய்ய பயமாக இருந்தது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. வாழ்க்கை ஒரு சூன்யம் என்பது போல் பயத்தை ஏற்படுத்தியது. எப்போது இவ்வாறு நடந்தாலும் உங்கள் புத்தகத்தில் ஏதாவது ஒன்றை எடுத்து முதலில் இருந்து வாசிக்க … Read more

நிரந்தரமாக ஒத்தி வைக்கப்படும் இறுதித் தீர்ப்பு: அன்பு நாவல் குறித்து சக்திவேல்

hஅன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு நாவலைப் பற்றிய சக்திவேலின் மதிப்புரை மயிர் சிற்றிதழில் வெளிவந்துள்ளது. இனி வரும் காலத்தில் சக்திவேல் முக்கியமான எழுத்தாளராக வருவார் என்று முன்னறிவிக்கிறேன். என் முன்னறிவிப்புகள் ஒருபோதும் தவறியதில்லை. நாவலைப் பாராட்டி விட்டார் என்பதற்காக அல்ல; மதிப்புரையில் ஒரு parable வருகிறது. இது போன்ற குட்டி நீதிக்கதைகளை ஃப்ரெஞ்சில் சியோரன் எழுதுவார். சக்திவேல் அந்தக் கதையைத் தனியாகவே எழுதியிருக்கலாம். எழுதியிருந்தால் அது அவரது புனைவு எழுத்தில் வரவு வைக்கப்பட்டிருக்கும். என்னைப் போலவே … Read more

அன்பின் ஒளி…

இன்று என் நண்பர் ஒருவர் ஃபோனில் அழைத்தார். அவர் பற்றிய எந்தக் குறிப்பைக் கொடுத்தாலும் அவர் யார் எனக் கண்டு பிடித்து விடுவீர்கள். அதனால் கொஞ்ச நாளைக்கு அப்படியே விடுகிறேன். அன்பு நாவல் பாதி வந்திருக்கிறேன் என்று சொல்லி விட்டு அது பற்றி நிறைய பேசினார். அதையெல்லாம் பதிவு செய்து வெளியிட்டாலே நாவலுக்கு நல்ல மதிப்புரையாக இருக்குமே என நினைத்தேன். இதையெல்லாம் எழுதுங்களேன் என்று லஜ்ஜையின்றி குறிப்பிட்டேன். நிச்சயம் என்றார். இந்த ஒட்டு மொத்த உரையாடலிலும் அவர் … Read more

அன்பு: பிரபு கங்காதரன்

“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில் புகும் அரசே அன்பெனும் வலைக்குட்படு பரம் பொருளே….” என இறைவனை விளிக்கிறார் வள்ளல் பெருமான். அன்பு உயிர்களை இன்புற்றிருக்க செய்யவேண்டுமேயன்றி அது தீராத துன்பத்தில் தள்ளிவிடலாகாது என்பதே இப்புதினத்தின் நோக்கமாக கருதுகிறேன். அன்பாயிலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான். நிற்க. என் சொந்தக்கார பெண் ஒருவர் உண்டு, ஊர் பயணம் வந்தாலும் என் பிள்ளைகளுக்கு நான் ஊற்றுகிற தோசைதான் பிடிக்கும், என் கணவருக்கு நான் வைக்கும் மீன் குழம்புதான் பிடிக்குமென்று … Read more

அன்பு: ஆயிரம் சுடர் கொண்டு ஒளி விடும் நாவல்

அன்புள்ள சாரு, அன்பே வடிவான இயேசு பிரானை கடவுளாக வரித்த ஒரு வைகிங் ராஜா அந்த அன்பினாலேயே இயேசு சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டி மற்ற பேகன் வழிபாட்டாளர்களைக் கொன்று குவிக்கும் வல்ஹலா எனும் தொடரை Netflix இல்சமீபத்தில் பார்த்தேன். ரத்தம், நிணம், நெருப்பு, பேரழிவு, பல நூற்றாண்டுகளான கலாச்சாரத்தின் முழுமையான அழித்தொழிப்பு எல்லாமே அன்பே வடிவான ராச்சியத்தை உருவாக்க!அந்த ராஜாவிற்கு அன்பின்மேல் இருக்கும் அதிதீவிர அர்ப்பணிப்பு, செய்யும்அழிவுகளை அவனுக்கு மிகச்சுலபமாக நியாயப்படுத்திவிடுகிறது. ”எல்லாம் உங்கள் நன்மைக்குத்தான்” இதைப் … Read more

ஆரோவில் சிறுகதைப் பட்டறை

இப்போது நான் 2020இல் ஆறு மாதங்களில் எழுதிய பூச்சி பதிவுகளைத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் நான்கு தொகுதிகள். ஆயிரம் பக்கங்களுக்கு மேல். இப்போதுதான் இரண்டாம் தொகுதியை முடித்தேன். இன்னும் இரண்டு தொகுதிகள். அதனால்தான் ஆரோவில் பட்டறை பற்றி எழுதவில்லை. சுமார் முப்பது பேர் வந்திருந்தார்கள். எல்லோரும் புதுமுகம். ஒரு நாள் முழுவதும் இருந்து விவாதித்தார்கள். எல்லோருமே மூன்று கதைகளையும் படித்து விட்டு வந்திருந்தார்கள். குடி, கொண்டாட்டம், டான்ஸ் என்று போட்ட போது நூறு பேர். இப்போது மதியம் … Read more