உயிரின் விலை

நான் கணக்கில் எத்தனை பலவீனன் என்பதும், சீனி எனக்கு எத்தனை உறுதுணையாக இருக்கிறார் என்பதும் மீண்டும் நிரூபணம் ஆகியது.  ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆயிரம் பேர் ஆயிரம் ரூபாய் அனுப்பினால் நலம் என்று எழுதி விட்டேன்.  நூறு பேர் என்று எழுதியிருக்க வேண்டும்.  இதைக் கூட சீனி மட்டும்தான் சுட்டிக் காட்டினார்.  ஆயிரம் பேரா பணம் அனுப்புவார்கள்? நான் என்ன ஆன்மீகவாதியா?  சீனிக்கு அது நூறு பேர் என்று புரிந்து விட்டது.  இப்போது மாற்றி விட்டேன்.  அந்தக் … Read more

வைர சூத்திரத்தின் விலை

ஏற்கனவே பல முறை எழுதிய விஷயம்தான்.  மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது.  ஒரு இணைய இதழில் நான் கொடுத்த மிக நீண்ட நேர்காணலை நீங்கள் படித்திருப்பீர்கள்.  என் எழுத்து வாழ்விலேயே எனக்கு அதிக எதிர்வினைகள் வந்தது அந்த நேர்காணலுக்குத்தான்.  அதற்கு முன்பு ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையின் இணைய இதழில் கோணல் பக்கங்கள் என்ற பத்தியை எழுதியபோதுதான் அந்த அளவுக்கு எதிர்வினைகள் வந்தன.  அந்த நீண்ட நேர்காணல் ஒரு நூறு பக்க புத்தகமாக வரும்.  நூறு பிரதிகள் விற்கும்.  எனக்கு அதன் மூலம் ஆயிரம் ரூபாய் ராயல்டி கிடைக்கும்.  நேர்காணல் வந்த … Read more

அஞ்சலி: ரணஜித் குஹா (1923-2023) | ஆளப்படுபவர்களின் வரலாறு: ரவிக்குமார்

நான் அடிக்கடி வரலாற்றறிஞர் ரணஜித் குஹா பற்றி என் கட்டுரைகளில் குறிப்பிடுவது வழக்கம். அவர் சமீபத்தில் தன் நூறாவது வயதில் ஆஸ்திரியாவில் மறைந்தார். குஹா என் ஆசான்களில் ஒருவர். அவருடைய ஸபால்ட்டர்ன் ஸ்டடீஸ் இல்லாவிடில் ஔரங்ஸேப் நாவல் இல்லை. அவர் பற்றிய நண்பர் ரவிக்குமாரின் முக்கியமான கட்டுரையை இங்கே பகிர்கிறேன். நன்றி: இந்து தமிழ் திசை.

ஒடியல் கூழ்

வவுனியாவில் இரண்டு தினங்கள் தங்கிவிட்டு இப்போது யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். யாழ்ப்பாணம் போன பிறகுதான் எந்த விடுதியில் தங்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். அங்கே ஒடியல் கூழ் சாப்பிட வேண்டும் என்பது ஆசை. ஆனால் யாரைக் கேட்பது என்று தெரியவில்லை. 50 ஆண்டுகளாக தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன் நான். யாழ்ப்பாணமும் தமிழ் பேசும் நிலம்தான். அங்கே எனக்கு ஒடியல் கூழ் கொடுக்க ஒரு ஆள் இல்லை. ரெஸ்டாரண்டில் கிடைக்குமா என்று … Read more