பூனை ஆர்வலர்களுக்கு… (மற்றவர்களும் படிக்கலாம்)

சீனியை நினைத்து பயந்துகொண்டே இதை எழுதுகிறேன். கீழே தரைத்தளத்தில் ஒரு பதினைந்து பூனைகள் உள்ளன. ஒரு பூனைக்குட்டியை கீழே உள்ள பாதுகாவலர்கள் அடித்துக் கொன்று விட்டார்கள். விரிதியானா படம் பார்த்திருப்பதால் அப்படித்தான் நடந்திருக்கும் என்று நம்புகிறேன். அந்தப் பதினைந்தில் ஒரு தாய்ப்பூனையும் அதன் மூன்று குட்டிகளும். நாங்கள் வீடு மாற்றிக்கொண்டிருக்கிறோம். கடந்த இரண்டு தினங்களாக தாய்ப்பூனையைக் காணவில்லை. குட்டிகளின் வயது ஒரு மாதம். நாள் பூராவும் பசியில் கதறிக்கொண்டிருந்தது. பூனைகளின் பெருந்தாயான அவந்திகா நேற்று அடையாறு காந்திநகர் … Read more

படித்ததில் பிடித்தது

சவூதி அரேபியா பற்றி சமீபத்தில் ஒரு சிறிய குறிப்பைப் படித்தேன். அதை எழுதியவரின் கருத்து அது ஒரு தேசமே இல்லை, வெறும் பாலைவனம் என்பது. அந்த நண்பர் அப்துர் ரஹ்மான் முனீஃப் என்ற சவூதி அரேபிய எழுத்தாளரைப் படித்திருக்க வாய்ப்பு இல்லை. தாமஸ் ஹார்டி, தஸ்தயேவ்ஸ்கி போன்றவர்களுக்கு நிகரான எழுத்தாளர் அப்துர்ரஹ்மான் முனீஃப். சவூதியில் வசிக்கும் நண்பர்கள் முனீஃபை வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சவூதி பற்றி சமீபத்தில் ஒரு கதை படித்தேன். மலையாளத்திலிருந்து அதை … Read more