நான் இன்னும் பார்க்கவில்லை சாரு. பகத் பாசில் நடிப்பைப் பார்த்துவிட்டு ஓவர் ஆக்டிங் செய்யும் நம் ஆட்களை சும்மா ஜாலியாக கிண்டல் செய்யும் பதிவு இது. அந்த ஊர் மண்ணின் ஸ்டைல் இது சாரு. மம்முட்டி மோகன்லால் என அனைவரும் சும்மா வந்துவிட்டு தான் போவார்கள். ஜோசப் என்ற படத்தில் நடித்த ஹீரோ கூட முதல் பட ஹீரோ என்பதே தெரியாமல் அசத்தியிருப்பார்.
நெடுமுடி வேணு கூட மிக இயல்பாக எல்லா படங்களிலும் நடிப்பார். Sex படம் என்று வந்து விட்டால் மட்டும் அதீத ஓவர்ஆக்டிங்கை வெளிப்படுத்துவார்.
அராத்து
ஜோஜி பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. நான் இப்போது நாவல் வேலையில் இருப்பதால் விரிவாக எழுதவில்லை. இல்லையென்றால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது போல் பத்து பக்கத்துக்கு மதிப்புரை எழுதியிருப்பேன். மேலே உள்ள பத்தி அராத்து எழுதியது. அவர் சொல்ல வருவது ஃபஹத் ஃபாஸிலின் நடிப்பை வைத்து மகா நடிகன் ஆ ஊ என்று இன்னும் ஒரு வாரத்துக்கு முகநூலில் கூவுவார்கள் என்பதுதான். அதற்கு நான் பதிலாக ஃபஹத் ஃபாஸில் இந்தப் படத்தில் நடிக்கவில்லை, வர்றார், போறார், அவ்ளோதான் என்று எழுதினேன். அதற்கு அராத்து எழுதிய பதில்தான் மேலே.
வரப் போகும் குமுதம் இதழில் நடிப்பு பற்றி ஒரு முழுநீளக் கட்டுரை எழுதியிருக்கிறேன். அதனால் இங்கே விரிவாக வேண்டாம். இந்தியாவின் மகா நடிகனாக அறியப்படும் நவாஸுத்தின் சித்திக்கை விடவும் நல்ல நடிகர் ஃபஹத் ஃபாஸில். அவரை மோகன் லாலுடன், மம்முட்டியுடன் கூட ஒப்பிட இயலாது. ஃபஹத் சகல விதமான பாத்திரங்களிலும் வேறு வேறு விதமாக நடிக்கிறார். ஒரே மாதிரி நடிப்பு என்ற பேச்சே இல்லை. அப்படிப் பார்த்தால் ஜோஜி அவருடைய உச்சம். அதில் அவர் வருகிறார், போகிறார். படத்தில் பெரும்பாலும் அவர்தான். ஏன் அவர் இந்தியாவின் மகத்தான நடிகர், மகா நடிகர் என்றால் ஜோஜியில் கமலோ, மோகன் லாலோ, நவாஸுத்தீன் சித்திக்கோ நடித்திருந்தால் நடிப்பில் உச்சம் தொட்டிருப்பார்கள். நடிப்பதற்கென்றே உள்ள பாத்திர அமைப்பு அது. ஒரு அப்புராணிப் பையன் ரெண்டு கொலை பண்ணி விடுகிறான். அவன்தான் ஃபகத் பாசில். எப்படியெல்லாம் நடிக்கலாம்? ஆனால் ஃபஹத் நடிக்கவில்லை. இத்தனைக்கும் அவருடைய மற்ற படங்களில் சற்று ஓவர் ஆக்டிங்கோ என்று நினைக்கும் அளவுக்குப் பிச்சு உதறியிருப்பார். உதாரணமாக, கும்பளாங்கி நைட்ஸ். அந்த அளவுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு இருந்த ஜோஜியில் (ஃபஹத்தின் பெயர்தான் ஜோஜி) அவர் நடிக்கவே இல்லை. ஆனால் அதற்காக நம் விஜய் சேதுபதி மாதிரி தொம்மையாக நின்று கொண்டிருக்கவும் இல்லை. வேறு ஏதோ ஒரு மேஜிக் செய்கிறார். அந்த மேஜிக் என்ன என்பதற்கு நாம் Grotowskiக்குப் போக வேண்டும். இப்போது நேரம் இல்லை. அந்த மேஜிக் காரணமாகத்தான் ஃபஹத் ஃபாஸில் ஒரு மகா நடிகன். ஆனால் நம் முகநூல் நண்பர்கள் கமலையும் மகா நடிகன் என்பார்கள். அப்போதுதான் நானே மொக்கை வாங்க வேண்டி வரும். அதைத்தான் நீங்கள் கோடி காட்டினீர்கள் என்று புரிந்து கொள்கிறேன். வேலை இருக்கிறது, ஓடுகிறேன்.
***
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai
***