எனக்குத் தெரிந்த அத்தனை எழுத்தாளர் நண்பர்களுக்கும் நான் ஏதாவது ஒரு சமயத்தில் ஃபோன் செய்தால் அவர்கள் அதை எடுப்பதில்லை. சரி, அவர்களுக்கும் ஆயிரத்தெட்டு வேலை இருக்கும். பலரும் எழுதும்போது ஃபோனை எடுப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சொல்லி வைத்தாற்போல் எல்லோருமே 36 மணி நேரம் கழித்துத்தான் ஃபோன் செய்கிறார்கள். அல்லது, மெஸேஜ் அனுப்புகிறார்கள். குறைந்தது 36 மணி நேரம். ஒருநாள் காலை பத்து மணி அளவில் ஸக்கரியாவுக்கு ஃபோன் செய்தேன். எடுக்கவில்லை. அதில் எனக்கு ஆச்சரியமும் இல்லை. எந்த எழுத்தாளரும்தான் எடுப்பதில்லையே, அப்புறம் என்ன ஆச்சரியம்? ஆனால் மூன்றாம் நாள் காலை நான்கு மணிக்கு எழுந்து ஃபோனை ’ஆன்’ பண்ணினால் இரவு ஒரு மணிக்கு ஸக்கரியா மெஸேஜ் அனுப்பியிருக்கிறார். ”ஸாரி சாரு, ஃபோனையே இப்போதுதான் எடுத்தேன். என்ன விசேஷம். இன்று ஃப்ரீதான். கூப்பிடுங்கள்.” அதற்குள் அந்த அவசர வேலையை ஜெயமோகனின் உதவியால் முடித்து விட்டிருந்தேன். ஜெயமோகன் பொதுவாக 12 மணி நேரம் எடுத்துக் கொள்வார். அன்று எனக்கு அதிர்ஷ்டம் மூன்று மணி நேரத்திலேயே எடுத்து உடனடியாக வேலையையும் முடித்துக் கொடுத்து விட்டார்.
பா. ராகவன் – அவரோடு வெளி உலகம் எப்படித் தொடர்பு கொள்கிறது என்பதே எனக்குப் புரியாத புதிர். அபிலாஷ் – கிண்டி ரேஸில் பணம் கட்டுவது மாதிரி. எடுத்தால் அதிர்ஷ்டம். அவருக்கு நான் ஃபோன் செய்யும் போது கட்டாயம் அன்று ரிஷப ராசிக்கு என்ன பலன் போட்டிருக்கிறான் என்று பார்த்து விட்டுத்தான் பண்ணுவேன். ரிஷப ராசி – ஏமாற்றம் என்று இருந்தால் ஃபோன் பண்ண மாட்டேன். அராத்து – வேண்டாம். நீங்களே அனுபவப்பட்டுப் பார்த்தால்தான் தெரியும். இத்தனைக்கும் தினமும் இருபது நிமிடம் பேசி விடுவோம். அந்த இருபது நிமிடத்தில் நான்கு முறையாவது அவந்திகாவிடமிருந்து அழைப்பு வந்து விடும்.
ஆனால் ரஹ்மான் எத்தனை பிஸியான நபர்? மெயில் போட்டால் அதிக பட்சம் ஒரு மணி நேரம்தான். பதில் வந்து விடும். அவரும் மணிக்கணக்கில் தியானம் போன்ற ஒரு பணியில் ஈடுபட்டிருப்பவர்தானே?
ஆனால் ஆங்கில எழுத்தாளர்களிடம் இந்தப் பிரச்சினையே இல்லை. எனக்குத் தெரிந்த, என்னோடு தொடர்பில் உள்ள ஆங்கிலம், அரபி மற்றும் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்கள் அனைவரும் தொலைபேசி என்ற சாதனம் கண்டு பிடிப்பதற்கு முன்பு வாழ்ந்த மனிதர்களைப் போலவே வாழ்கிறார்கள். இரண்டு தினங்கள் தொடர்ந்தாற்போல் அவர்களோடு இருந்தாலும் அவர்கள் போனை எடுத்துப் பேசியோ, மெஸேஜ் அனுப்பியோ நான் பார்த்ததே இல்லை. ஒரே அறையில் கூடத் தங்கியிருக்கிறேன்.
இதெல்லாம் ஏன் இப்போது ஞாபகம் வந்தது என்றால், அந்த ஆங்கில எழுத்தாளரை அழைத்தால் மறுநாள்தான் பதில் வருகிறது. நேற்று பன்னிரண்டு மணி நேரம் எழுதினேன். களைத்துப் போய் தூங்கி விட்டேன்.
கொடுத்து வைத்தவர்கள். நானோ ஃபோன் அடிக்ட். பார்த்துக் கொண்டே இருப்பேன். ஃபோன் வந்தால் உடனே எடுத்து விடுவேன். எடுக்காவிட்டால் சமையல் வேலையாக இருக்கிறேன் என்று அர்த்தம். எழுத்து வேலை என்றால் உடனே எடுத்து விடுவேன். ஃப்ளோ கெட்டு விடும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால், ஒரு வாக்கியத்துக்கு ஒருமுறை அவந்திகா அழைப்பாள்.
இது குறித்து இன்று அவந்திகாவிடம் சொன்னேன். மற்ற எழுத்தாளர்களெல்லாம் எப்படி என்று விளக்கினேன். “இதன் மூலம் என்ன சொல்ல வருகிறாய்?” என்றாள். “ஒன்றுமில்லை” என்றேன். பிறகு “எனக்கும் இவர்களைப் போல் எழுத வேண்டும் என்று ஆசை” என்றேன்.
“ஐயோ, நீயெல்லாம் உட்கார்ந்தால் எட்டு மணி நேரம் ஒன்பது மணி நேரத்துக்கு உன்னோடு பேசவே முடியாதே?” என்று சொல்லி, கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு “ம்ஹும், தப்பு தப்பு, உன்னோடு நான் பேசியதே இல்லை. நீ வாழ்நாள் பூராவும் எழுதிக் கொண்டிருக்கிறாய்” என்று முடித்தாள்.
எனக்கு அவந்திகா ஒரு வாக்கியத்துக்கு ஒருமுறை அழைப்பதாகவும், அவளுக்கு நான் அவளோடு பேசியதே இல்லை என்பதாகவும் தோன்றுகிறது.
ஆனால் ஒன்று உண்மை. மாலை நான்கிலிருந்து இரவு பத்து வரை எனக்கு எழுத்து நேரம். அப்போது அவளிடமிருந்து அழைப்பு இருக்காது.
***
Bynge.in செயலியில் உள்ள என்னுடைய அ-காலம் படித்தீர்களா? இப்போதும் அந்த 28 அத்தியாயங்களும் பிஞ்ஜிலேயேதான் உள்ளன. நீங்கள் படிக்கலாம். www.bittalk.in தளத்திலும் என் கட்டுரைகளைப் படிக்கலாம்.
வரும் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு க்ளப் ஹவுஸில் சந்திப்போம். முதல் பதினைந்து நிமிடங்களைத் தவற விடாதீர்கள். அப்போது சில முக்கியமான விஷயங்களைப் பேச இருக்கிறேன்.
***
முடிந்தவர்கள் சந்தா/நன்கொடை அனுப்புங்கள்.
அதற்கான விவரங்கள்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai