ஒரு இளைஞனின் கடிதம் வந்தது. பதினாறு வயதிலிருந்து உங்களைப் படிக்கிறேன். இப்போது வயது இருபத்து மூன்று. பதின்பருவத்தில் உங்களுக்கு நீண்டதொரு கடிதம் எழுதினேன். ஆனால் அனுப்பவில்லை. அனுப்பினால் திட்டுவீர்கள் என்று கேள்விப்பட்டு பயந்து அனுப்பாமல் இருந்து விட்டேன்.
இப்படி நீண்டது அந்த ஆங்கிலக் கடிதம். இதுதான் சாரம். ரொம்பவும் மனதைத் தொட்டதால் “ஒருநாள் ப்ரூ ரூம் பக்கம் வாருங்களேன், சாப்பிடுவோம்” என்று பதில் எழுதினேன்.
உங்களோடு சாப்பிட்டால் செத்துடுவேன் சாரு.
ஐயோ, ஏன், நான் ஒன்றும் விஷமெல்லாம் வைக்க மாட்டேனே?
இல்லையில்லை, நீங்கள் என் கடவுள். உங்களோடு சாப்பிட்டால் நான் என்ன ஆவது?
நேற்றுதான் ரொம்பப் பரிதாபமாக எழுதினேன், தமிழ்த் தாய் விட்ட சாபம் அது இது என்று. இன்று இப்படி.
ஆனால் இந்த இளைஞர் இப்படி ஏழு ஆண்டுகள் தயங்கியதற்கு என்னைப் பற்றிய பயமே காரணம். எனக்கு எழுதுங்கள். நான் சீனியின் நம்பரைத் தருகிறேன். கேட்டுப் பாருங்கள். அவர்தான் என்னைத் திட்டுவார். மிரட்டுவார். எல்லாம். ஒருநாள் கூட அவரை நான் திட்டியதில்லை. காயத்ரியைக் கேட்டுப் பாருங்கள். அவள்தான் என்னைத் திட்டுவாள், மிரட்டுவாள். எல்லாம். ஒருநாள் கூட அவளை நான் திட்டியதில்லை. இந்த பொடிப் பயல் வினித்தைக் கேட்டுப் பாருங்கள். எனக்குப் பேரன் வயது. அவன் கூட அவன் தான் என்னைத் திட்டுவான், மிரட்டுவான். எல்லாம். நான் திட்டினதே இல்லை. ஆனால் எனக்குப் பெயர் திட்டுபவன். அடப்பாவிகளா!
இதில் சீனி இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார். எல்லோரும் என்னை விட்டுப் பிரிந்து போகிறார்களாம். ஏன் தெரியுமா? நான் அவர்கள் எல்லோரையும் திட்டி எழுதுகிறேனாம். நான் கேட்பது என்னவென்றால், திட்டி எழுதினால் என்ன? திட்டுவதற்குக் கூட உரிமை இல்லையா? வீட்டில் தந்தை திட்டுவதில்லையா? வீட்டுக்கு வெளியே காதலி திட்டுவதில்லையா? (காதலன்கள் திட்டுவதில்லை, தெரியும்.) அந்த மாதிரி நினைத்துக் கொள்ள வேண்டியதுதானே?
***
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai