இன்று என் நெருங்கிய சிநேகிதி இந்தப் பாடலை எனக்கு அனுப்பி கேட்டுப் பாருங்கள், இதுதான் இப்போதைய ட்ரெண்ட் என்று சொல்லியிருந்தார். நான் எனக்குப் பிடித்த பாடல்களை முகநூலில்தான் அதிகம் எடுத்துக் கொடுப்பதுண்டு. அதனால் அவர் சில பல மாதங்களுக்கு முன்பே – இந்தப் பாடல் பிரபலம் ஆவதற்கு முன்பே இது பயங்கரமாக பிரபலம் ஆகும் என்று சொல்லி முகநூலில் பகிர்ந்து இருந்தேன். தம்பி பார்க்கவில்லை போல. எனக்கே அனுப்பியிருக்கிறார். சிங்களப் பாடல். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அலுக்கவே அலுக்காத பாடல். இந்தப் பாடகி யோஹனியின் குரலுக்காகவே சிங்களம் கற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறது.