ஞானம்

வனம் வானம் நட்சத்திரம் மேகம் அண்ட சராசரம்

கடல் காற்று குன்று பாறை மலை விருட்சம் அருவி நதி

மிருகம் பிராணி புழு பூச்சி பூக்கள் பறவை மீன்

மழை மண் புயல் இடி மின்னல் குழந்தை புனித நூல்

சாக்கடை கோவில் சங்கீதம் சிற்பம் ஓவியம்

இலக்கியம் பெண் தீர்க்கதரிசி

அசுரர் தேவர் கடவுள்கள்

யாரும் எதுவும்

யாருக்கும் எதற்கும்

ஒருபோதும் கற்பிப்பதில்லை

தேடுபவன் கண்டடைகிறான்