ஒரு புகைப்படம்: ஸ்ரீராம்

ஒரு புகைப்படத்தைப் பார்த்து பத்து நாட்களாக ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நேற்று ஜெயமோகனின் தளத்திலும் இன்று சாருவின் தளத்திலும் மீண்டும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தேன். சக்திவேலுடன் சாரு இருக்கும் புகைப்படம்தான் அது. சக்திவேல் ஜெயமோகனின் வாசகர். Physically challenged. சாரு அந்தப் புகைப்படத்தில் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். ஒரு நாகரிகமான சமூகத்தில் இதைப் பற்றியெல்லாம் வியப்பது கூட அநாகரிகம்தான். ஆனால், சமீபத்தில் இன்னொரு புகைப்படம் பார்த்தேன். நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு விருந்திட்டு, ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்திருக்கிறார். … Read more

விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 5

விஷ்ணுபுரம் விழா பற்றி நேற்று அபிலாஷின் கட்டுரையைப் படித்ததிலிருந்து அது பற்றியே நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். என் மனதை அவர் கருத்துக்கள் துளைத்துக் கொண்டே இருந்தன. நான் ஒன்றுக்கு இரண்டாக அவருக்குப் பதிலும் சொல்லி விட்டேன். ஆனாலும் என் பதிலில் எனக்குத் திருப்தி இல்லை. இருப்பினும் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்தேன். செமினார் வேறு, விழா வேறு என்பதே அது. நாம் கருத்தரங்கையும் விழாவையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. கருத்தரங்குகளில் எல்லோரும் … Read more

ஆண்டாளும் கொஞ்சம் வெங்காயமும்…

மைலாப்பூரில் உள்ள பாரதீய வித்யா பவன் அரங்கில் தினந்தோறும் காலை ஏழு மணியிலிருந்து எட்டரை வரை திருப்பாவை பிரசங்கம் நடந்து வருகிறது. டிசம்பர் பதினெட்டிலிருந்து இன்று வரை பதினெட்டு பாசுரங்கள் பிரசங்கம் முடிந்திருக்கிறது. ஜனவரி முதல் தேதி வரை இந்தப் பிரசங்கம் நடக்கும். கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார்தான் பிரசங்கிக்கிறார். அற்புதமான பிரசங்கம். சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் இலக்கியத்தில் அவர் ஒரு ஞானக்கடல் என்று தோன்றுகிறது. பிரசங்கம் முடிந்ததும் சிற்றுண்டி வேறு தருகிறார்கள். செவி, வயிறு இரண்டுக்கான உணவும் இலவசம். … Read more

த அவ்ட்ஸைடர் – 32

அவ்ட்ஸைடர் படத்தைப் பார்க்காமல் விட்டு விட்ட என் அன்பு நண்பருக்கு… முப்பத்தொன்றாவது அத்தியாயம் எத்தனை வலியுடன் எழுதப்பட்டது என்பதைப் புரிந்து கொள்கிறீர்களா?  அவ்ட்ஸைடர் படத்துக்கு அரை மணி நேரம் தாமதமாக வந்து வெறும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடிந்த நீங்கள் எனக்கு இன்று எழுதிய கடிதத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அரங்கில் குழுமியிருந்த 800 பேரில் என் வாழ்க்கையைச் சொல்லும் அந்த ஆவணப் படத்தை யார் அத்தியாவசியமாகப் பார்த்தே ஆக வேண்டும் என்று ஒரு ஆளைச் … Read more

நாகூர் என்றதும் நினைவுக்கு வரும் ஐந்து விஷயங்கள்?

நாகூர் என்றவுடன் இன்றைக்குச் சட்டென உங்களுக்கு நினைவுக்கு வரும் ஐந்து விஷயங்கள் என்னென்ன? நாகூர் ஹனீஃபா. அவரைப் போன்ற குரல் படைத்தவர் அவருக்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை. அதேபோல், அவருடைய பாடல்களில் ஒன்றுகூட சோடை போனது இல்லை. எல்லாமே ரசிக்கத் தகுந்தவை. அது, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே…’ பாடலாக இருந்தாலும் சரி, ‘ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?’ பாடலாக இருந்தாலும் சரி; ஹனிஃபாவின் பல பாடல்கள் கண்களில் கண்ணீரை வரவழைப்பவை. சில்லடி. எங்கள் … Read more

விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 4

எல்லாம் சரி, ஒற்றைக் கையைத் தூக்கித் தூக்கிக் காண்பிப்பதுதான் நடனமா?  அதை அறிஞர் அண்ணாவே செய்திருக்கிறாரே? எஸ். செந்தில் குமார், திருச்சி. செந்தில், கீழே வரும் பத்தியைப் படித்துப் பாருங்கள்.  “பாபு ரங்கண்ணாவைப் பார்க்கும் முதல் காட்சியில், ரங்கண்ணா தனக்குத்தானே, தன் மனதுக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கும் நாதத்தைக் கேட்டு ரசித்தபடி அமர்ந்திருப்பார். அதைக் கலைக்க விரும்பாதபடி, பாபுவும் மற்றவர்களும் தயங்கி நின்றிருப்பார்கள். தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த பகுதிகளில் ஒன்று அது,” என்று ‘தி. ஜானகிராமனின் இசையுலகம்’ என்ற … Read more