சாரு இப்படியும் இருக்கிறார்: சமஸ்

முகநூல் என்பதை என் நண்பர்கள் பலர் தங்கள் எழுத்தைப் பலருக்கும் கொண்டு சேர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.  நானும் அப்படியே.  என் தளத்தில் எழுதுவதை முகநூலிலும் பகிர்கிறேன்.  ஆனால் என் நண்பர்களில் பலர் முகநூலில் புழங்கும் பலரது பதிவுகளைப் படித்து பைத்தியமே பிடித்துப் புலம்புகிறார்கள்.  முகநூலிலிருந்து ஒரு வாரம் வெளியே வந்து மீண்டும் நுழைகிறார்கள்.  காரணம், புற உலகில் நாம் ஹலோ கூட சொல்லத் தயங்கும் லும்பன்களின் எழுத்தையெல்லாம் அங்கே படித்து அதை மனதுக்குள் கொண்டு செல்கிறோம்.  கக்கூஸில் … Read more

எனக்குப் பிடித்தவை, எனக்குப் பிடிக்காதவை…

ஜி.குப்புசாமியின் கட்டுரைக்கு எதிர்வினை பின்வருவது. ஜி. குப்புசாமியின் கட்டுரை லிங்க்: https://www.arunchol.com/g-kuppusamy-reaction-for-charu-nivedita ஒரு மாதத்துக்கு முன்பு ராணி திலக் போன் செய்தார்.  எடுக்க முடியவில்லை.  ஔரங்கசீப் முடிந்ததும் அவரோடு பேச வேண்டும்.  ஒரு புதைபொருள் அகழ்வாராய்ச்சியாளரைப் போல் பழைய எழுத்தாளர்களைத் தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறார் ராணி திலக்.  அதேபோல் நற்றிணை யுகனும் போன் செய்தார்.  அவரும் என் உற்ற நண்பர்.  என்னவோ தெரியவில்லை, ஔரங்கசீப்பை முடிக்காமல் போனைத் தொடவே முடியவில்லை.  இது ஒரு மனநிலை.  புரிந்து கொள்வீர்கள் … Read more

கால சுப்ரமணியனின் லயம்

சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஸ்ரீராமுடன் திருநெல்வேலி சென்றிருந்தேன்.  இலக்கியவாதிகள் நிறைந்த ஊர்.  ஆனால் அவர்கள் யாருக்கும் என்னைப் பிடிக்காது.  எனக்கும் அப்படியே.  நான் சென்றிருந்தது ஒரு அம்மனை தரிசிக்க.  ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அத்தனை பிரபலம் அடையாத அம்மன்.  முஸ்லிம் பெண்கள்தான் அதிகம் காணப்படுவார்கள்.  கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கை.  நான் இரண்டு முறை சென்றிருக்கிறேன்.  கேட்டது கிடைத்தது.  ஆனால் நான் கேட்பதும் கொடுப்பது மாதிரி சின்னதாகத்தான் கேட்பேன்.  நோபல் பரிசு வேண்டும் என்றெல்லாம் பேராசையாகக் கேட்பதில்லை.  … Read more

புதிய புத்தகங்கள்

புத்தக விழா வருகிறது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னுடைய புதிய புத்தகங்கள் எதுவும் புத்தக விழாவிலோ அதற்குப் பிறகோ வரவில்லை.  கடைசியில் வந்த புத்தகம் நிலவு தேயாத தேசம்தான்.  இடைப்பட்ட காலத்தில் நான் எத்தனையோ எழுதி விட்டேன்.  என் வாழ்நாளில் நான் அதிகம் எழுதியது என்றால் புதிய புத்தகங்கள் வராத இந்த கால கட்டம்தான்.  தியாகராஜா நாவல் 200 பக்கங்கள் – இன்னும் ஒரு நூறு எழுதினால் முடிந்து விடும்.  அசோகா 300 பக்கங்கள் – குறிப்புகள் … Read more

Body shaming குறித்து பெருந்தேவி

”வயசாய்டுச்சே”, ”எழுபது வயசாச்சு, இன்னுமா இப்படிப் பேசறீங்க” என்றெல்லாம் அக்கறை என்ற பெயரில் தொடர்ந்து வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பவன் நான். மிக நெருங்கிய நண்பர்கள் கூட விதிவிலக்கு இல்லை. கொடுமை என்னவென்றால், நாற்பது வயதிலிருந்தே இந்த அக்கிரமத்தை எதிர்கொண்டு வருபவன் நான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் காலை ஆறு மணி அளவில் சாந்தோம் தேவாலயம் வாசலில் ஒரு நண்பர் என்னுடைய சிவந்த கண்களைப் பார்த்து “ஏன் சாரு, நேத்து நைட் தூங்கலியா, அடடா, வயசானா இப்டித்தான் நைட்ல தூக்கம் … Read more

அடியேன் தொடாத ஏரியா

சாருவோட நான் ஔரங்கசீப் படிப்பதற்காக binge app download செய்தேன். ரெண்டே நாள்ல இதுவரை வந்த அத்தியாயங்கள் முழுக்க படிச்சு முடிச்சிட்டேன். இப்போ அடுத்த அத்தியாயங்கள் வரும்வரை காத்திருக்கணும் இதுதான் இப்படிப் படிப்பதில் உள்ள இம்சை.நாவல் பட்டாசு. சாரு இதுவரை தொடாத ஏரியா. ஜ்யோவ்ராம் சுந்தர் (முகநூலில்)