உங்கள் அழுக்கை என் மூஞ்சியில் அடிக்காதீர்கள்!!!

இந்தக் கட்டுரையின் தலைப்பு “உங்கள் மூத்திரத்தை என் மூஞ்சியில் அடிக்காதீர்கள்” என்றுதான் இருக்க வேண்டும். இருந்தாலும் தலைப்பிலேயே மூத்திரம் என்று வருவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதால் அழுக்கு என்று வைத்திருக்கிறேன். தில்லையின் தாயைத்தின்னி நாவலுக்கு ஒரு நீண்ட மதிப்புரை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கு நடுவில் வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். நகம் நீண்டு கிடக்கிறது. முடி காடு மாதிரி வளர்ந்து விட்டது. இதுபோல் இன்னும் பல ஜோலிகள். எதையும் செய்யவில்லை. தில்லையின் தாயைத்தின்னி … Read more

புத்தாண்டு வாழ்த்து

எனக்கு எல்லா தினங்களுமே கொண்டாட்ட தினங்கள்தான். ஆனாலும் நீங்கள் அனைவரும் இந்த தினத்தை விசேஷமாகக் கொண்டாடுவதால் நானும் உங்கள் கொண்டாட்டத்தில் இணைகிறேன். இப்போது கார்ல் மார்க்ஸுடன் சேர்ந்து மனுஷ்ய புத்திரன் வீட்டுக்குச் செல்கிறேன். என் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anecdote

கீழே கொடுக்கப்பட்டுள்ள அர்ஜுனின் குறிப்பில் anecdote என்ற வார்த்தை குழப்பத்தை ஏற்படுத்தியது.  இதை என் தோழி எக்ஸிடம் (எக்ஸ் தோழி அல்ல; தோழி எக்ஸ்.  பெயர் சொல்லக் கூடாது அல்லவா, அதனால் இந்த ஏற்பாடு!) கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று அர்ஜுனின் குறிப்பு வந்த ஃபேஸ்புக் பக்கத்தின் இணைப்பை அனுப்பினேன்.  ஏற்கனவே என் வீட்டுக்கு எதிரே இருக்கும் காந்தி நகர் க்ளப்புக்கு அருகில் உள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் சூடம் கொளுத்தி சத்தியம் செய்திருக்கிறேன், இனிமேல் … Read more

தியாகராஜா

பெரும் சங்கீத ரசிகனான என் இளம் நண்பன் அவனுடைய வழக்கமான ‘சினிக்கல்’ தன்மையுடன் என்னிடம் இன்று மாலை சொன்னான்: “நீங்கள் தியாகராஜா நாவலை இத்தனைக் காலம் இழுத்துக்கொண்டிருப்பதன் காரணத்தைக் கண்டு பிடித்து விட்டேன்.” ”என்ன காரணம்?” ”ஔரங்ஸேப் பற்றி எக்கச்சக்கமான நூல்கள் உள்ளன.  ஆனால் தியாகராஜாவின் வாழ்க்கை பற்றி ஒரு குறிப்பும் இல்லை.  அதனால்தான் உங்களால் எழுத முடியவில்லை.” ”எழுத்தில் என்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை. மட்டுமல்லாமல் தியாகராஜாவும் என்னைப் போல் ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் எழுத்தாளர்தான்.  … Read more

இன்று மாலை சந்திக்கலாமா? – சிறுகதை

கடந்த பத்து ஆண்டுகளில் வீட்டு நிலைமை வெகுவாக மாறி விட்டது.  தலைகீழாய் மாறி விட்டது என்று சொன்னால்தான் கச்சிதமாக இருக்கும்.   பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வாரம் இரண்டு முறை மதியம் பன்னிரண்டு மணி அளவில் பார்க் ஷெரட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாரில் நண்பர் மணியை சந்திப்பேன்.  கூட நண்பர்களும் இருப்பார்கள்.  பிறகு அந்த இடத்தை டென். டௌனிங் என மாற்றினோம். ஒரு காலத்தில் என் வீட்டைப் போல் இருந்த வெஸ்ட்மின்ஸ்டர் பார் என்ற புனித ஸ்தலத்தைக் கொண்டிருந்த … Read more