ரிஷி மூலம்

இப்போதைய எழுத்தாளர்களில் எனக்குப் பிடித்தவர்கள் யார் என்று கேட்டால் நீண்ட நேரம் யோசிக்க வேண்டியிருக்கும்.  அந்த அளவுக்கு சமகாலத் தமிழ் எழுத்து சோர்வடையச் செய்வதாக உள்ளது.  இருந்தாலும் நல்ல எழுத்து வரும் போது நான் அதைப் படிக்கத் தவறுவதில்லை.  அப்படி நான் வேண்டி விரும்பிப் படிக்கும் ஒருவர் தேவி பாரதி.  அவருடைய காந்தி என்ற நீண்ட சிறுகதையை காலச்சுவடில் படித்த போது அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினேன்.  அவருடைய கிராமமான வெங்கரையாம்பாளையத்துக்கு நேரில் சென்று அவரோடு தங்கியிருந்து … Read more

ஒரு கடிதம்

அன்பின் சாரு அவர்களுக்கு, என் பெயர் அருண், மதுரையை சேர்ந்தவன். தற்பொழுது ஒரு சிறிய சைவ உணவகத்தின் முதலாளியாக இருக்கிறேன். உங்கள் எழுத்துக்களின் பக்தன் நான். ஆம் பக்தன் என்று சொல்வதே சரியானது. நான் ஈஷா யோகாவின் வகுப்புகள் முடித்தவன். ஜக்கி வாசுதேவின் போதனைகளுக்கும் உங்களின் எழுத்துக்களுக்கும் பெரிய வித்யாசம் எனக்கு தெரியவில்லை. மனிதர்களில் இப்படி ஒரு வெளிப்படையான ஆளா ? என்று வியக்க வைத்தவர் நீங்கள்.உங்களை பற்றி எத்தனையோ எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும். அவை அனைத்தையும் … Read more

நாவல் வெளியீடு – இன்று மாலை

வரும் சனிக்கிழமை 19ம் தேதி காவ்யா பதிப்பகத்தால், “அகநாழிகை” புத்தக உலகில் வைத்து என்னுடைய அருமை நண்பர் சாம் நாதனின் முதல் நாவலை அடியேன் வெளியிடுகிறேன்.  நண்பர்கள் இதையே அழைப்பாக ஏற்று நிகழ்ச்சிக்கு வருவீர்கள் என்று நம்புகிறேன். நிகழ்ச்சி மாலை 5 – 7 மணி வரை நடைபெறும். “சமகால இலக்கியச் சூழல்” குறித்து அராத்து  ஓரிரு வார்த்தைகள் பேசுவார்.  நேரம் அனுமதித்தால் பேச்சு – எழுத்து இரண்டுக்குமான வித்தியாசம் பற்றி சிறிது பேசுவேன். இடம்: #390, … Read more

டிசம்பரில் இலங்கைப் பயணம்

டிசம்பர் 17-ஆம் தேதி நானும் வாசகர் வட்ட நண்பர்கள் சிலரும் இலங்கை செல்லலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.  முதலில் சென்னையிலிருந்து மோட்டார் சைக்கிளிலேயே கோவா செல்லலாம் என்ற திட்டம் இருந்தது.  ஆனால் ஏற்கனவே ஒருமுறை கோவா சென்றிருப்பதால் கோவா – மோட்டார் சைக்கிள் பயணத் திட்டத்தை டிசம்பருக்குப் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.  டிஸம்பர் 17 மதியம் கொழும்புவுக்கு விமானம்.  டிசம்பர் 18 என் பிறந்த நாள் என்பதால் டிசம்பர் 17 கிளம்பலாம் என்று திட்டம்.  … Read more

இயக்குனர் வெற்றிமாறனுக்கு ஒரு கடிதம்…

அன்பு நண்பர் வெற்றிமாறனுக்கு, நான் உங்களுடைய படங்களை பெரிதும் கொண்டாடுபவன் என்பதை உங்களிடமே சொல்லியிருக்கிறேன்.  உங்கள் படங்களைப் பாராட்டி உயிர்மையிலும் எழுதியிருக்கிறேன்.  படித்திருப்பீர்கள்.  தமிழின் சமகால இலக்கியவாதிகளுடன் நட்பும், சமகால இலக்கியப் பரிச்சயமும் உள்ளவர் நீங்கள் என்பது பலருக்கும் தெரியாது.  இந்த நிலையில் சீன எழுத்தாளர் Jiang Rong எழுதிய Wolf Totem என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பில் பெரிதும் ஆர்வம் காண்பித்து, நண்பர் சி. மோகன் மொழிபெயர்ப்பில் அது வெளிவரவும் காரணமாக இருந்தீர்கள் என்று அறிந்தேன்.  … Read more