மரபார்ந்த மொழியின் மரணம் (புருஷன் பதிவுகள் – 2)

1980களிலும் 1990களிலும் இருந்தது போன்ற ஒரு சிந்தனைத் தளம் தமிழ் எழுத்துலகில் இருந்திருந்தால் இந்நேரம் புருஷன் நாவலுக்கு எதிர்வினையாகவும் மதிப்புரையாகவும் இரண்டு மூன்று புத்தகங்களே வந்திருக்கும்.  ஜே.ஜே. சில குறிப்புகளுக்கு அப்படி வந்தது.  ஸீரோ டிகிரிக்கு வந்தது.  விஷ்ணுபுரத்துக்கு வந்தது.  இன்னும் சில புத்தகங்களுக்கு வந்தது என்றாலும், புத்தகங்களைத் தவிரவும் ஒரு சிந்தனைத் திறப்பாக ஒரு கட்டுரை வந்தால் அதைத் தொடர்ந்து, அதை மறுத்தோ அதன் வழி சென்றோ ஒரு ஐம்பது கட்டுரைகள் வரும்.  அப்படியான ஒரு … Read more

Ryu Murakami, சாரு நிவேதிதா, அராத்து… (புருஷன் பதிவுகள் – 1)

சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் ஹருகி முராகாமியை விட பல மடங்கு காத்திரமான எழுத்தாளர் ரியூ முராகாமி.  ஜப்பானில் ஹருகியின் புத்தகங்கள் வெளியானவுடன் இரண்டு கோடி பேர் வாங்குகிறார்கள் என்றால் ரியூ முராகாமியை ஒரு கோடி பேர் வாங்குகிறார்கள்.  ஆனாலும் ரியூ முராகாமி சர்வதேச அளவில் இன்னும் அத்தனை பிரபலம் ஆகவில்லை.  ஆகவும் மாட்டார் என்று தோன்றுகிறது.  ஏனென்றால், அவர் எழுதும் அளவுக்கு ட்ரான்ஸ்கிரஸிவ் சமாச்சாரங்களை உலகம் தாங்காது.  உலகம் அதையெல்லாம் செய்து கொண்டுதான் இருக்கிறது.  ஆனால் … Read more

புருஷன் நாவல் பற்றி

புருஷன் நாவலை மீண்டும் ஒருமுறை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நாவலை இத்தனை குறுகிய இடைவெளியில் இத்தனை முறை படித்தது இதுவே முதல் முறை. என்னால் ஒரு நாவலை இரண்டாவது முறை படிக்க இயலாது. மாரியோ பர்கஸ் யோசாவின் நாவல்களை மட்டுமே சில ஆண்டுகள் இடைவெளி கொடுத்து மீண்டும் படிப்பேன். வாசிப்பு இன்பத்துக்கு உதாரணம் மாரியோ பர்கஸ் யோசா. ஆனால் அராத்துவின் புருஷன் மாரியோ யோசாவையும் தூக்கி அடித்து விட்டது. இந்த ஒரு பத்தியைப் படித்துப் பாருங்கள்: என் எதிரே, … Read more

திறவாய்! திறவாய்! நின் தயவாலே… – செல்வா (செல்வகுமார் கணேசன்)

(செல்வா என்று அழைப்பதே சகஜமாக இருக்கிறது என்பதால் செல்வா என்றே குறிப்பிடுகிறேன். இந்தக் குறிப்பு ஒரு சிறுகதை போலவே இருக்கிறது. செல்வாவுக்கு உரைநடை வெகு லாவகமாகக் கைகூடுகிறது. அவர் எழுதப் போகும் தொடரின் முதல் அத்தியாயமாக இதைக் கொள்க. ஓரிரண்டு இடங்களில் க், ச் சேர்த்திருக்கிறேன் செல்வா. உதாரணமாக, பள்ளிகூடம் என்பதை பள்ளிக்கூடம் என்று ஆக்கினேன். ஆனால் ஒன்றிரண்டு இடங்கள்தான் என்பது ஆசுவாசமாக இருந்தது. எனவே இந்தப் பிரதியையே இறுதிப் பிரதியாக வைத்துக்கொள்ளுங்கள்.தொடர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்கள். … Read more

தரமான தாம்பத்திய வாழ்வுக்கான ஒரு கையேடு குறித்து மேலும் ஓர் எதிர்வினை: ஷ்ருதி

Hey Charu! I wanted to take a moment to share my thoughts on the advice we’ve been discussing about the welfare of marital relationships, particularly from the perspective of men. At the core of any healthy relationship or partnership, whether it’s a marriage or a committed bond, lies the fundamental principles of trust and honesty … Read more

நீங்கள் ஏன் குடிப்பதில்லை? செல்வா

செல்வா ஒரு பன்னிரண்டு சிறுகதைகள் எழுதியிருப்பார். ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன் அனுப்பினார். எல்லா தஞ்சாவூர்க்காரர்களையும் போல அவை என்ன ஆயின என்று என்னிடம் அவர் கேட்கவில்லை. நானும் அப்படியே விட்டுவிட்டேன். கதைகளின் மொழி பிரமாதமாக இருந்ததாக நினைவு. அப்புறம் அவரைப் பார்க்கும்போதெல்லாம் திரும்பவும் அந்தக் கதைகளை அனுப்பி வைக்கும்படி சொல்வேன். அவரும் எல்லா தஞ்சாவூர்க்காரர்களையும் போல இதோ என்பார். கதை வராது. நானும் அப்படியே மறந்து விடுவேன். இன்று காலை ஒரு பதினைந்து இருபது பக்கத்துக்கு … Read more