காதலர் தினச் செய்தி

Ullasa: An Erotic Tale நாவலில் சுமார் எண்பது பக்கங்களை எழுதி முடித்தேன். அதில் ஒரு இருபது பக்கங்களை மூன்று நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். நாவல் மொத்தமாக இருநூறு பக்கங்கள் வரலாம். இந்த எண்பது பக்கங்களில் காமம் கொஞ்சம்தான். காதல்தான் நிரம்பி வழிகிறது. கடைசி ஐம்பது பக்கங்கள் காமம் மட்டுமே இருக்கும் என்கிறது நாவலுக்கான வரைபடம். ஒரு வரைபடத்தோடுதான் இந்த நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதனால் தலைப்புகூட கடைசியில் மாறலாம். பதிப்பாளர் என்ன சொல்கிறாரோ அதுவே நடக்கும். நாவலின் … Read more

குகை வாழ்க்கை

ஆம், குகை வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டும்.  வெளியுலகத் தொடர்பே இல்லை.  யாரோடும் பேசுவதில்லை.  வழக்கமாக சீனியோடு தினமும் பேசுவேன்.  ஆனால் உல்லாசம் நாவலுக்கான ’ஃபீல்ட் வொர்க்’ முடிந்து திரும்பிய பிறகு சீனியோடும் பேசவில்லை. காலையில் ஐந்து மணிக்கு எழுந்து கொள்கிறேன்.  ஒரு மணி நேரம் என்னுடைய காலை வேலைகள், பூனைகளுக்கு உணவிடுதல் போன்றவற்றில் போய் விடும்.  பிறகு ஏழு மணி வரை எழுத்து (தியாகராஜா).  ஏழிலிருந்து எட்டரை வரை நடை.  கோடை வந்தால் இந்த நடை … Read more

தங்க பஸ்பம்

ஒரு வார காலம் ஒரு மலைவாசஸ்தலத்துக்குச் சென்றிருந்தேன். அதன் விவரங்கள் யாவும் என்னுடைய உல்லாசம் நாவலில் விரிவாக இடம் பெறும். Ullāsa : An Erotic Novel என்ற தலைப்பில் அதை நான் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்திய ஆங்கில இலக்கிய உலகம் நூறு ஆண்டுகள் பழமையில் வாழ்வதால் அதை ஆங்கிலத்தில் வெளியிடுவார்களா என்று தெரியாது. பிரிட்டனிலோ அமெரிக்காவிலோ வெளியிடுவதற்கான தொடர்புகள் எனக்கு இல்லை. ஆனால் பெண்கள் எழுதினால் உடனடியாக இந்தியாவிலேயே வெளியாகும். அதற்கு எந்தத் தடையும் இல்லை. … Read more

எழுதாத கதையின் கதை (சிறுகதை) : சிரஞ்சீவன்

ச திருப்பதிசாமி என்னிடம் சிறுகதை எழுதச்சொல்லி பணித்தார்.  அன்றுதான் அந்தக் கதை எங்கள் கண்முன் நிகழ்ந்திருந்தது.  ஆனால், என்னால் எழுத முடியவில்லை.  இன்றைய தேதிக்கு பத்து வருடங்கள் ஓடிவிட்டன.  கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடலை ஒட்டி இருக்கும் ஒரு விடுதியில் நடந்த சந்திப்பில் பத்து பேர் கலந்து கொண்டோம்.  அங்கே சிறுகதை எழுதுவது ஒரு போட்டியைப் போல அறிவிக்கப்பட்டது.  இலக்கிய வரையறைகளுக்கு உட்பட்டு அந்தக் கதை எழுத்தில் நிகழ மறுத்து என்னை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு … Read more

புருஷனும் ஓல்ட் மாங்க்கும்… (அராத்துவின் கேள்வியும் என் பதிலும்)

அராத்துவும் ஓல்ட் மாங்க் ரம்மும் பின்னே சாருவும் ரியூ முராகமியும்… அராத்து ”இப்போது அராத்துவின் புருஷன் நாவலைப் படித்துக்கொண்டிருக்கும்போது அராத்து ரியூ முராகாமியைப் பல மடங்கு அதிகமாகத் தாண்டி விட்டார் என்றே தோன்றியது. நேற்று நான் கொடுத்திருந்த பப் சம்பவம் ஒரு உதாரணம். அப்படியானால் அராத்து என்னையும் தாண்டி விட்டார் என்றே பொருள் கொள்ள வேண்டும். (உடனே என் வாசகர் வட்ட நண்பர்கள் சிலர் வாசகர் வட்ட அறையில் உள்ள என் படத்தை அகற்றி விட்டு அங்கே … Read more