விஞ்ஞானி அப்துல் கலாம் உருவாக்கிய இளைஞர் சமுதாயம்!!!

பலவிதமான கொலை மிரட்டல்களும் நான் விரைவில் மரணம் அடைய வேண்டும் என்ற தீவிரமான பிரார்த்தனைகளும் கொண்ட பல மின்னஞ்சல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.  எதிர்பார்த்ததுதான்.  இதற்கெல்லாம் பதற்றம் அடைந்தால் கைகால் நடுங்கும்; நெஞ்சுவலி வரும் என்பதால் சாத்வீகமாக எதிர்கொள்கிறேன்.  இன்று ஒரு நீண்ட கடிதம் வந்தது.  அதன் ஒரு பகுதியை மட்டும் உங்கள் எஞ்ஜாய்மெண்டுக்காகப் பதிவிடுகிறேன்.  இதற்காக எல்லாம் போலீஸ் ஸ்டேஷன் போகும் அளவுக்கு எனக்கு நேரம் இல்லை.  ஆனால் ஒன்று… இப்படிப்பட்ட கோடானுகோடி இளைஞர்களைத்தான் கலாம் உருவாக்கினார். … Read more

je taime…

ஒன்பது மாத தினசரிகளைப் படித்துக் கொண்டிருந்த போது ஒரு கட்டுரை.  தீபன் என்ற ஃப்ரெஞ்ச் படம் பற்றி என் நண்பர் ஷங்கர் எழுதியது.  அதில் அதன் இயக்குனரின் பெயரைக் குறிப்பிடும்போது ழாக் அடியார்டு என்று எழுதியிருந்தார்.  Jacques Audiard என்பதில் முதலில் Audiard ஐ எடுத்துக் கொள்வோம்.  ஃப்ரெஞ்சிலும் மற்றும் பல ஐரோப்பிய மொழிகளிலும் t, d என்ற உச்சரிப்புகள் இல்லை.  த்த, த என்பதே அதன் உச்சரிப்பு.  எனவே Audiard என்ற பெயரை ஓதியார் என்று … Read more