உலகின் மிகச் சிறந்த காதல் கதைகளில் ஒன்று

இன்று காலை நான்கு மணிக்கு எழுந்த கையோடு அராத்து அனுப்பியிருந்த ஒரு சிறுகதையைப் படித்தேன்.  ஒரு பத்திரிகையில் வெளிவரும் என்று சொல்லியிருந்தார்.  இப்படி ஒரு காதல் கதையை என் இலக்கிய அனுபவத்தில் படித்ததில்லை.  உலகின் மிகச் சிறந்த காதல் கதைகளில் இதுவும் ஒன்று எனத் திண்ணமாகச் சொல்வேன். அராத்து எழுத்தாளராகி விட்டார்.  முகநூல் இத்தனை பிரசித்தம் ஆவதற்கு முன்பு – ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும் – “நீங்கள் எந்தக் காலத்திலும் எழுத முடியாது” என்று அராத்துவிடம் சொன்னேன்.  … Read more

ஸோரோ – 4

முடிந்தால் துக்க வீட்டுக்கு நேரில் செல்லுங்கள்.  அது பெரும் ஆறுதலாகவும் உதவியாகவும் இருக்கும்.  ஸோரோவின் உடலோடு தோட்டத்தில் ஒரு மணி நேரம் தனிமையில் அமர்ந்திருந்தேன்.  உறங்கிக் கொண்டிருந்த அவந்திகாவை எழுப்பி விஷயத்தைச் சொல்ல எனக்கு மனம் இல்லை.  அதிர்ச்சியாகி விடுவாள்.  ஒரு மணி நேரம் கழித்து மாடியிலிருந்து எழுந்து வந்து பார்த்துத் தெரிந்து கொண்டாள்.  துக்கத்தை அவளால் வெளிப்படுத்தக் கூட முடியவில்லை.  காரணம், என் நிலை அப்படி இருந்தது. ஸோரோவின் உடலை என்ன செய்வது என்ற பிரச்சினை.  … Read more