யார் அந்த ஏழு பேர்?

டாஸ்மாக் பாரில் பணியாளனாக வேலை செய்யும் 14 வயதுப் பொடியன் ஒருவனுக்கு ஏழு பேர் பற்றித் தெரியுமா? எந்த ஏழு பேர் என்றுதானே கேட்பான்? திரு ரஜினிகாந்த் அவர்களுக்கும் அந்த அளவுக்குத்தான் பொது அறிவும் அரசியல் அறிவும் உள்ளன. உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டதற்கே தலை சுத்துது என்று சொன்ன அரசியல் ஞானி அவர். அவர்ட்ட போய் ஏனய்யா இப்படியெல்லாம் கேட்டு மன உளைச்சல் பண்ணுகிறீர்கள்? விலங்கினங்களைத் துன்புறுத்தக் கூடாது என்று மேனகா காந்தி … Read more

டிக் டாக் – அவுத்துப் போட்டு ஆடு – அராத்து

டிக் டாக் – அவுத்துப்போட்டு ஆடு ! தமிழ் நாட்டில் பெரும்பாலான பெண்கள் தன்னை சினிமா ஹீரோயினாகவே நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். சினிமா என்பது கேளிக்கை மட்டுமல்ல இவர்களுக்கு. அவர்கள் வாழும் வாழ்க்கையையே ஒரு சினிமாவாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த ஆப்பின் மூலம் தெரியவருகிறது. இவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. தங்கள் வாழ்வையை , சினிமாவில் இருந்து எடுக்கும் சீன்கள் மூலம் நிரப்பிக்கொள்கிறார்கள்.தங்கள் வாழ்வின் எந்த சிச்சிவேஷனிலும் , அதற்கு சம்மந்தப்பட்ட சினிமா … Read more

என் புத்தகங்கள் கிடைக்கும் இடம்

இங்கே வந்ததிலிருந்து பல நண்பர்கள் என் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  முக்கியமாக பழுப்பு நிறப் பக்கங்கள், நிலவு தேயாத தேசம்.  இந்தப் புத்தகங்கள் அனைத்தும் அமீரக புத்தக விழாவில் ஷார்ஜா தூசு படிந்து கிடக்கின்றன யார் கையும் படாமல். இன்றுதான் கடைசி தினம்.  கேட்ட நண்பர்கள்-தேவைப்படும் நண்பர்கள் அனைவரும் அங்கே சென்று அதை வாங்கிப் பயன் அடையும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மாத்ருபூமி அரங்கில் என்னுடைய புத்தகங்கள் கிடைக்கும். தமிழ் அரங்குகளில் கிடைக்காது. 

தியடோர் பாஸ்கரனின் நூல் வெளியீட்டு விழா

ஷார்ஜா வந்திருக்காவிட்டால் இந்த விழாவில் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன். நண்பர்கள் யாவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு இந்த நூலை வாங்கிப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

சர்க்கார் – 2

எனக்கு கமர்ஷியல் சினிமா மீது எந்த வெறுப்பும் இல்லை.  ஒரு சமூகத்துக்கு இம்மாதிரி பொழுதுபோக்குகள் தேவைதான்.  எல்லோருமே பெர்க்மன் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.  ஆனால் சர்க்கார் பொழுதுபோக்குப் படம் மட்டும் அல்ல.  அது ஒரு அரசியல் படம்.  அதாவது, பல தமிழ் சினிமா நடிகர்களையும் போலவே விஜய்யும் முதல்வராக ஆசைப்படுகிறார்.  எதார்த்தம் என்னவென்றால் அவர் அப்பா சந்திரசேகர் ஆசைப்படுகிறார்.  அந்த விபரீத ஆசையின் பலனை தமிழர்களாகிய நாம் அனுபவிக்கிறோம். மன்னராட்சியை வைத்துக் கொண்டிருக்கும் வளைகுடா நாடுகளைப் … Read more

சர்க்கார் – ஒரு சின்ன கேள்வி

சண்டையில் ஈடுபடுபவர்கள் எதிராளி வீட்டுப் பெண்களை இழுத்து வசை பாடுவதை நாம் அறிவோம். சர்க்காரில் அப்படி ஒரு வசனம். கள்ள ஓட்டுப் போடுவதைப் பார்த்து உனக்குக் கோபம் வரலேன்னா உன் பொண்டாட்டியை யாராவது போட்டாலும் கோபம் வராதா? சரி. 6000 ரூபா சம்பளத்துக்கு முனிசிபாலிட்டில குப்பை அள்ளுகிறார்கள். ஆனால் உன் சம்பளம் 10 கோடி 20 கோடி 30 கோடி. அப்போ நீ செய்ற காரியத்தை என்னன்னு சொல்லலாம்? எப்படி வர்ணிக்கலாம்?  வஜனத்தில் நான் poor. கேட்டு … Read more