ஒரு வித்தியாசமான வாழ்த்து
வணக்கம் சாரு, கீழே இருப்பது என்னுடைய நண்பன் – உங்களுடைய தீவிர வாசகன் – ஒருவன் இன்று எழுதியது. இலங்கையில் இருக்கும் உங்களுடைய ஒரு தீவிர வாசகக் கும்பல் பற்றி உங்களிடம் ஏலவே சொல்லியிருக்கிறேன். அந்தக் கும்பலில் ஒருவன். அதிகம் படிப்பவன். உங்கள் எழுத்துக்களைக் கொண்டாடும் எங்கள் தலைமுறையின் முக்கியமான வாசகன். இது உங்கள் கவனத்தில் கிட்டவேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காகத்தான் இதை இங்கு காவிக்கொண்டு வருகிறேன். அன்புடன், அமல். 2010. வெள்ளவத்தையில் ஒரு புத்தகசாலை! இப்போது மூடிவிட்டார்கள். உருப்படியான புத்தகங்களை விற்றதால் கூட இருக்கலாம். அங்கே புத்தகம் ஒன்றைக் கண்டேன். புத்தகத்தின் பெயரை விட அந்த எழுத்தாளரின் பெயர்தான் எப்போதிலிருந்தோ நினைவில் நின்றுகொண்டிருந்தது. குமுதத்திலோ , குங்குமத்திலோ, ஆனந்தவிகடனிலோ அந்த எழுத்தாளரின் பெயரை கண்டிருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரின் பத்திகளை வெறித்தனமாய் வாசித்திருக்கிறேன். ஆனால் அது சிறுவயதுகளில் . எப்படியோ அந்த எழுத்தின் தாக்கத்தின் வழி அவரின் பெயரும் மனதில் … Read more