கலகம் காதல் இசை

கலகம் காதல் இசை என்ற நூலை பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.  ஒரு நாளில் முடிக்க வேண்டிய நூல்.  பிழைகளும் அதிகம் இல்லை.  ஆனால் நான் பிழை திருத்தம் செய்யும் போது அந்த நூலைத் திரும்பவும் ஒருமுறை எழுதுவதாகவே சொல்ல வேண்டும்.  உதாரணமாக, ”Sleimane Benaissa என்ற அல்ஜீரிய நாடகாசிரியர்” என்று வரும் போது அதில் ஒன்றும் பிழை இல்லையே என நான் தாண்டிப் போக மாட்டேன்.  அல்ஜீரியப் பெயர்களில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு அதில் e வராது … Read more

புத்தகங்கள்

சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து யாரும் இந்தியா வருகிறீர்களா? வருவதாக இருந்தால் ஒரு உதவி. நான்கு சிறிய புத்தகங்களை எடுத்து வர முடியுமா? அவற்றை என் நண்பர் உங்கள் முகவரிக்கு அனுப்பி விடுவார். இந்தியா வந்ததும் என் முகவரிக்கு அனுப்பி விடலாம். ஏன் எழுதுகிறேன் என்றால், சுரைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்று ஆகி விடுகிறது தபால் செலவு. அதனால் கேட்கிறேன். charu.nivedita.india@gmail.com

cat food

நான் என்னுடைய தினசரி வாழ்க்கை முறை பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியும் அதையெல்லாம் படிக்காமல், அல்லது, படித்தும் மண்டையில் ஏற்றிக் கொள்ளாமல் திரும்பத் திரும்ப எனக்கு யோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தால் நானும் என் வேலையையெல்லாம் விட்டுவிட்டு திரும்பத் திரும்ப என் தினசரி வாழ்க்கை பற்றித்தான் எழுதிக் கொண்டிருப்பேன்.  வேறு வழியே இல்லை.  என்னை ங்கொம்மா ங்கோத்தா என்று திட்டி வரும் கடிதங்களைப் பற்றி நான் கவலையே படுவதில்லை. குப்பைக்கூடையில் போட கண்ணிமைக்கும் நேரம்.  அந்த ஆளுக்காகப் பரிதாபப்பட … Read more

அவர் பெயர் ராமசேஷன்

ராமசேஷன் ஒரு ஸாஃப்ட்வேர் எஞ்ஜினியர்.  ஆனாலும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஐந்து ஆண்டுகள் படித்து புலவர் பட்டம் பெற்றவரை ஒத்த தமிழ்ப் புலமை உண்டு. அதற்கும் மேலும் என்று சொல்லலாம்.  வாழ்நாள் பூராவும் பழந்தமிழ் இலக்கியத்தில் ஊறினவர்.  வெண்[பா எழுதும் ஆற்றல் கொண்டவர்.  (நல்லவேளை, புதுக்கவிதை சமாச்சாரத்தில் இறங்கவில்லை). சமகால இலக்கியம் இப்போதுதான் பரிச்சயம்.  நாம் எல்லாம் தமிழ் எழுத்தாளர்களாக இருந்தும் இலக்கணம் பற்றிக் கவலைப்படுவதில்லை.  ஒற்றாவது மயிராவது என்று ஒற்று இல்லாமலேயே எழுதிக் காலம் கழிக்கிறோம். … Read more

மஹாஸ்வேதா தேவி

மஹாஸ்வேதா தேவியைத் தெரியாத இலக்கிய வாசகர்கள் இந்தியாவில் இருக்க வாய்ப்பில்லை.  அவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கூட வாங்கக் கூடும் என்று பலரும் நம்பினார்கள். இது ஒரு பக்கம்.  என்னுடைய சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் பிழைதிருத்தம் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் முடிக்கும் நிலையில் இருக்கிறேன்.  நான் பிழை திருத்தம் செய்யும் போது அந்த நூலைத் திரும்பவும் வாசிக்கிறேன்.  அதனால்தான் நேரம் ஆகிறது.  சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் கல்லூரிகளில் பாடமாக வைத்திருக்கப்பட வேண்டிய ஒரு … Read more

சி.சு. செல்லப்பா

முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம். எல்லாப் பத்திரிகைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. அந்தக் காலகட்டத்தில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா. அவரின் இந்தச் சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது செல்லப்பா பல துறைகளிலும் சாதனை செய்திருக்கிறார் என்று தெரிகிறது. 1940களின் வாழ்க்கை குறித்த செறிவான இலக்கிய சாட்சியமாக இக்கதைகள் விளங்குகின்றன என்பதில் சந்தேகமே இல்லை. சி.சு. செல்லப்பாவின் சிறுகதைகள் மொத்தமும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரம் மூலம் தொகுப்பாக வந்துள்ளது. இதை ஒவ்வொரு தமிழரும் … Read more