உணவும் ஃபாஸிஸமும்

இஸ்கான் அமைப்பு (The International Society for Krishna Consciousness)  பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  தெரியவில்லையெனில் இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளலாம்.  என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள் சிலர் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.  மிக நெருங்கிய நண்பர்கள் என்றால், என் உயிருக்காகவும் என் வாழ்வுக்காகவும் நான் கடன்பட்டவர்கள் என்று பொருள்.  அவர்களோடு நான் இஸ்கான் பற்றி ஒருபோதும் விவாதித்ததில்லை.  விவாதிக்கப் போவதும் இல்லை.  பொதுவாகவே நெருக்கமான நண்பர்களோடு நான் முரண்படும் விஷயங்கள் பற்றி விவாதிப்பதில்லை என்ற பழக்கத்தை … Read more

தமிழ்

பூனைகளும் நானும் என்ற கட்டுரைக்கு சரியான எதிர்வினை இல்லை. என் நண்பரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இது ஒரு நாவல் மெட்டீரியல் மற்றும் சினிமா என்றார். அராத்துவும் அதையே சொன்னார். எனக்கும் அதேதான் தோன்றியது. மற்றபடி மாதாமாதம் நான்கு பேர் பூனை உணவு அனுப்புவார்கள். அதே நான்கு பேர் இந்த மாதமும் அனுப்பினார்கள். சமயங்களில் தோன்றும், ’இந்த வேலையெல்லாம் நமக்கு எதற்கு? எந்தப் பூனை எப்படிப் போனால் நமக்கு என்ன?’ என்று. ஆனால் இந்தத் தன்மானச் சிந்தனையெல்லாம் பூனைகளின் … Read more

குடியுரிமைச் சட்டமும், அதைத் தொடர்ந்த படுகொலைகளும்…

பல சமயங்களில் என் கருத்துக்கள் திரிக்கப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது. அதற்கு நான் ஒரு விளக்கம் கொடுக்கிறேன். ஆனாலும் அந்த விளக்கம் காற்றில் விடப்பட்டு என்னுடைய திரிக்கப்பட்ட கருத்தே நிலைபெற்று விடுகிறது. ஐந்து ஆண்டுகள் கடந்தும் கூட சாரு ஒரு எழுத்தாளனின் படுகொலையை நியாயப்படுத்தினார் என்று சக எழுத்தாளர்கள் தங்கள் நேர்காணல்களில் சொல்ல நேர்கிறது. பிறகு நான் அதற்கும் ஒரு விளக்கம் கொடுக்க நேர்கிறது. எப்படி? ஐந்து ஆண்டுகளுக்கு முன் சொன்ன விளக்கத்தையே. இப்படியே என் திரிக்கப்பட்ட கருத்தே … Read more

நிராகரிப்பும் தடையும் (8)

நேசமித்ரன் 18.02.20 நிலமற்றவர்கள்/ தேசமிருந்தும் தேசமிழந்தவர்கள்/நாடுகடத்தப்பட்டவர்கள்/ அகதிகளானவர்கள் தமது ஞாபகங்கள் அழிந்தழிந்து ஒரு புதிரடையாளம் பெறும் போது ஒரு மொழிதல் முறை உருவாகிற்று. அப்படியான மொழிதல் முறைமையில் ‘அறுதியிடல்’ அற்ற அடையாளச்சிக்கல் கொண்ட பாத்திரமாக்கல் உருவானது. அதில் காலமும் வெளியும் கூட புனைவே. இந்திய புராணீகங்களில் அதுவொரு திரிசங்கு சொர்க்கம், ஆகாயத்திற்கும் பூமிக்கும் நடுவில் உருவான வெளி. Hundred years of solitude- Macondo – fictitious town . Dublin- James Joyce. இது ஒருமுறைமை. … Read more

நிராகரிப்பும் தடையும் (7)

அ. ராமசாமியின் கருத்தை ஒட்டிய முகநூல் விவாதம். 17.02.20 மதுரை அருணாச்சலம்: ராமசாமி சார், ஏதோ அவருடைய படைப்புகளால் பயனடைந்த வாசகர்கள் மட்டுமே அவரை கொண்டாடுகிறோம். உடன் நிற்கிறோம். வெறும் விமர்சகனை விட, பயனடைந்த தேர்ந்த வாசகன் எவ்வளவோ மேல். வாசகன் நன்றியுடனும் இருப்பான் என்பது என் எண்ணம். உலகளாவிய பார்வை கொண்ட சாருவை இங்கே புரிந்து கொள்வதில், பலருக்கும் ஒவ்வாமை இருந்தது, இருக்கிறது என்பதே என்னுடைய எண்ணம். சாரு தமிழ்ச்சமூகத்தில் இருந்து விலகவில்லை. மற்ற எழுத்தாளர்கள் … Read more

நிராகரிப்பும் தடையும் (6)

அ. ராமசாமி 17.02.20 சாரு நிவேதிதாவின் பனுவல்கள் வளர்ச்சியடைந்த நடுத்தரவர்க்க மனநிலையோடு உரையாடல் செய்யும் பனுவல்கள். பெருமாள்முருகனின் பனுவல்கள் நடுத்தரவர்க்க மனநிலையே இன்னதென்றறியாத மனிதர்களின் உளப்பாங்கை நோக்கிப் பேசும் பனுவல்கள். இவ்விரண்டையும் இணையாக வைத்து விவாதிக்கும் புள்ளியைப் பனுவல்களுக்குள் கண்டறிவது இயலாத ஒன்று. அப்படிப் பேசும் ஒரு கட்டுரையை முக்கியமான கட்டுரை என்று சாரு நிவேதிதாவே முன்வைத்துப் பேச முன்வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சாரு நிவேதிதாவின் பனுவல்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் விவாதிக்கப்படாமல் போனதற்கும் அவரது புத்தகங்கள் சந்தைப்படுத்தப்பட்ட முறைகளும், … Read more