Scent of a woman
இந்தப் படத்தை எப்படி இத்தனைக் காலமாகத் தவற விட்டேன் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இதில் வரும் த்தாங்கோ நடனக் காட்சியை மட்டும் பார்த்திருக்கிறேன். அல் பச்சீனோவின் உச்சக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தும் படம். இந்தப் படத்தில் நடிப்புக்காக அவர் ஆஸ்கர் விருதும் பெற்றிருக்கிறார். நேற்று நாள் முழுதும் எழுதி விட்டு ஸில்வியா ப்ளாத்தின் தெ பெல் ஜார் நாவலைப் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு எட்டரை மணி வாக்கில் ஏதாவது படம் பார்க்கலாம் என்று தோன்றியபோது இந்தப் படம் கண்ணில் பட்டது. … Read more