ஒரு நவீனத்துவ காதல் காவியம்

Mariage d’Amour என்ற தலைப்பில் ஒரு நவீன காலத்துப் பாடல் உள்ளது. இதை சாப்பின் இயற்றியதாகப் பலரும் நினைத்து வருகின்றனர். இதை இயற்றியது Paul de Senneville என்ற ஃப்ரெஞ்ச் இசைக்கலைஞர். இயற்றிய ஆண்டு 1979. இந்தப் பாடல் ஸிம்ஃபனி இல்லை. ஒரே ஒரு பியானோ. இந்தப் பாடலை பிரபலப்படுத்தியவர் பியானிஸ்ட் ரிச்சர்ட் க்ளேடர்மேன். க்ளேடர்மேன் பற்றிப் பல முறை எழுதியிருக்கிறேன். லிங்க்: https://www.youtube.com/watch?v=1ej1SI4BRv8 இதே பாடலை ஆர்க்கெஸ்ட்ராவுடனும் இசைத்திருக்கிறார்கள். ஆனால் இதைக் கேட்கும்போது நீங்கள் யாரும் … Read more

இசையும் சமூகமும்…

இந்தக் கட்டுரையை நேற்றைய கட்டுரையோடு சேர்த்து வாசிக்கலாம். பல ஜனரஞ்சக எழுத்தாளர்கள் ஏதோ ஆர்வக் கோளாறின் காரணமாக அல்லது விதியின் கோர விளையாட்டுகளில் ஒன்றாக திடீரென்று இலக்கியக் கதை எழுதலாம் என்று முடிவெடுப்பது உண்டு. இருநூறு ஜனரஞ்சக நாவல்கள் எழுதியிருப்பார்கள். அல்லது, ராஜேஷ்குமாருக்குப் போட்டியாக ஒரு எண்ணூறு நாவல் எழுதியிருப்பார்கள். ராஜேஷ்குமார் ஆயிரம் என்று நினைக்கிறேன். இளையராஜா அடிக்கடி சொல்லிக் கொள்வது போல ராஜேஷ்குமார் போல ஆயிரம் நாவல்கள் எழுதியோர் உலகில் யாரும் இலர். இளையராஜா பத்தாயிரம் … Read more

ஸிம்ஃபனி

கிரிக்கெட்டில் இன்னமும் ஐந்த நாள் ஆட்டம் இருக்கிறது அல்லவா, அதைப் போலவே ஸிம்ஃபனி என்ற இசை வடிவமும் இன்னமும் உருவாக்கப்பட்டு, ரசிக்கப்பட்டும் வருகிறது. நமக்கு மேற்கத்திய ஜனரஞ்சக இசை வடிவங்களே பரிச்சயமாக இல்லாததால் ஸிம்ஃபனி என்ற சாஸ்த்ரீய இசை வடிவம் இன்னமும் அதிக தூரத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. மேலும், இன்றைய காலகட்டத்தின் கலாச்சார ரசனை பெருமளவுக்கு மாறி விட்டதும் ஒரு காரணம். இலக்கியத்தில் பார்த்தாலும் இந்த ரசனை மாற்றத்தைத் தெளிவாக உணரலாம். கம்ப ராமாயணத்தை எடுத்துக் கொண்டால், … Read more

உல்லாசம்: கதையும் மொழியும்…

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஒரு பிரபலமான இலக்கியப் பத்திரிகை ஒரு போட்டியை அறிவித்திருக்கிறது.  கதையோ, கவிதையோ, நாவலிலிருந்து ஒரு பகுதியோ எதுவாகவும் இருக்கலாம்.  ஆனால் இதற்கு முன் வெளிவந்ததாக இருக்கக் கூடாது. உல்லாசம் நாவலிலிருந்து ஒரு அத்தியாயத்தை அனுப்பலாம் என எண்ணினேன்.  அது உயிர்மையில் வெளிவந்த போது அதைப் படித்த போது அடிவயிறு கலங்கியது என்று பலரும் சொன்னார்கள்.  ஆனால் அதை அனுப்ப முடியாது என்றாள் ஸ்ரீ.  காரணம், போட்டி விதிகளில் ஒன்று, போட்டிக்கு அனுப்பப்படும் கதை இதற்கு … Read more

தூத்துக்குடி கொத்தனாரு…

தூத்துக்குடி கொத்தனாரு பாடல் கேட்டேன். இசைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை பாடல் வரிகளுக்குக் கொடுக்கவில்லை. பொதுவாகவே சினிமா பாடல் வரிகள் காலியான இடங்களை வார்த்தைகளால் நிரப்பும் வேலையாகத்தான் இருக்கின்றன என்பதால் இதில் எதுவும் ஆச்சரியம் இல்லை. ஆனால் தூத்துக்குடி கொத்தனாரு பாடல் இசையால் பிரபலம் ஆகவில்லை. அதன் பாடல் வரிகளால் பிரபலம் ஆகியிருக்கிறது. அநேகமாக பெண்ணின் ஜனன உறுப்புக்கான லோக்கல் வார்த்தையைப் போட்டு எழுதப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் இதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் … Read more

தில்லையின் விடாய் மற்றும் தாயைத்தின்னி: இன்றைய விழா

இன்று சென்னை மைலாப்பூர் கவிக்கோ அரங்கில் மாலை ஐந்து மணி அளவில் நடக்க இருக்கும் தில்லையின் நூல்கள் குறித்த விழாவில் சில தவிர்க்க இயலாத காரணங்களால் கலந்து கொள்ள இயலாத நிலையில் இருக்கிறேன். தாயைத்தின்னி வெளியான அன்றே அதை ஒரு பிரதி வாங்கியிருந்தேன். வாங்கி ஐந்தே நிமிடத்தில் ஜா. தீபாவிடம் கொடுத்து விட்டு நான் இன்னொரு பிரதி வாங்கிக்கொண்டேன். இந்த நாவலை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும் என்று ஜா. தீபாவிடம் கேட்டுக்கொண்டதும் ஞாபகம் இருக்கிறது. இன்றைய … Read more