ஆண்டாள்

பல பெண்ணியவாதிகளின் முன்னே நான் சிறியவனாகி விட்டேன்.  இவனா இப்படி?  வைரமுத்துவின் மேல் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள் இந்துத்துவவாதிகள்.  துரதிர்ஷ்டவசமாக அப்படி அவர் மேல் புகார் செய்யப்பட்டிருப்பதற்கு நான் ஆதரவாக இருக்க வேண்டியிருக்கிறது.  பனிரண்டு ஆழ்வார்களில் ஒருவராகவும், மற்ற பதினோரு ஆழ்வார்களையும் விட (அவர்கள் அனைவரும் ஆண்கள்) கவித்துவத்தில் உச்சத்தில் இருப்பவருமான ஆண்டாளை தாசி என்று மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்லியும் எழுதியும் செய்த வைரமுத்து சட்டத்தின் முன்னால் குற்றம் செய்தவரே ஆவார்.  ஒருவரை எப்படி சாதி சொல்லித் திட்டுவது குற்றமோ அப்படியே ஒருவரின் மதத்தை ஏசுவதும் குற்றம்தான்.  ஆழ்வாரை தாசி என்றால் ஏசுவதுதானே?  தாசி என்றால் நல்ல அர்த்தம் என்று விளக்கம் சொன்னால் ஆச்சா?  பறைக்கு அர்த்தம் சொல்லி பறை அடிப்பவரை நீர் சாதி பேர் சொல்லி விளிப்பீரா?  தாசிகள், விபச்சாரிகள் எல்லோரும் நம் தோழர்களே ஆவர்.  ஒடுக்கப்பட்டவர்கள் அவர்கள்.  அவர்களோடுதான் நாம் நிற்க வேண்டும்.  என்னுடைய எழுத்து இயக்கமே அப்படிப்பட்டதுதான்.  அதையெல்லாம் ஒரு வார்த்தை கூடப் படிக்காமல் (அதற்கு உடம்பும் மனசும் வளைய வேண்டுமே?  நாங்களெல்லாம் முகநூல் வீரர்கள் ஆச்சே? அதற்கு ஒற்றை வரி போதுமே?) என்னை நோக்கிக் கேள்வி கேட்பது அசட்டுத்தனமானது.

அது ஏன் இந்துக் கடவுள்களையும் இந்துக்களால் வணங்கப்படுபவர்களையும் மட்டுமே தாசி என்றும் திருடன் என்றும் ஏசுகிறீர்கள்?  இதே வார்த்தைகளை மற்ற மதங்களைச் சார்ந்த புனிதர்களை நோக்கிப் பேசுங்களேன்.  துணிவு இருக்கிறதா?

இது குறித்து அராத்து எழுதியதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.  பின்வருவது அராத்து:

”ஆண்டாள் பிரச்சனையில் சில கருத்துக்களைப் பார்த்தேன். ஆண்டாளை தாசி இல்லை என்கிறீர்களே ? தாசி என்றால் கேவலமா என்று பல திராவிட ஃபேஸ்புக் சிந்தனையாளர்கள் , கொதித்து எழுந்து இருந்தார்கள். பல ஃபேஸ்புக் பயனாளர்களும் பேஸ்தடித்துப்போய் , என்ன செய்வது என தெரியாமல் வாய் பொத்தி கிடந்தனர்.

எப்போதையும் விட இப்போதுதான் பொலிட்டிக்கல் கரக்டன்ஸ் உச்சத்தில் இருக்கிறது. அதற்கு ஃபேஸ்புக்தான் முக்கிய காரணம் . இது நல்லதுதான் என்றாலும் ஒரு சில நேரங்களில் கெதக் என்று இருக்கிறது.

தாசி கேவலம் இல்லைதான். தாசியாக இருப்பதுதான் மிகச் சிறப்பு என்று கூட வைத்துக்கொள்ளலாம். ஆனாலும் என்ன செய்வது ? ஆண்டாள் துர்பாக்கிய சாலி , அதனால் அவள் தாசியாக இருந்திருக்க வில்லை. அதனால் ஆண்டாள் தாசி இல்லை என்று பொலிட்டிக்கலி கரக்டாக சொல்ல வேண்டி உள்ளது கொஞ்சம் டயர்டாகத்தான் இருக்கிறது இல்லையா ?

நாளை பின்னே , யாரேனும் உங்க அம்மா தேவடியா என்றால் ,

தேவடியா கேவலம் இல்லை. தேவடியாக்களையே நாம் தான் உருவாக்கினோம். இப்போது உலகில் தலை சிறந்து விளங்குபவர்கள் தேவடியாக்களே. அன்பும் பண்பும் ஒருங்கே பெற்று உன்னத மனிதராக விளங்குபவரும் தேவடியாக்களே. ஆனால் அன்ஃபார்சுனேட்டிலி என் அம்மா தேவடியா இல்லை. தேவடியாவாக இருக்கும் அதிர்ஷ்டம் என் அன்னைக்கு வாய்க்க வில்லை. வருந்துகிறேன் , என் அம்மா தேவடியா இல்லை என்று கூற வேண்டி இருக்கும் போல …….

இப்படி நாம் சொல்வதை நம் அன்னை கேட்க நேர்ந்தால் , நம் தாயே கடுப்பாகி , போடா தேவடியா மவனே என திட்டி விட்டு நகரக்கூடும்.”