ஏஷியன் ஏஜ் & டெக்கான் க்ரானிக்கிள்

ஏஷியன் ஏஜ் தினசரியின் அகில இந்தியப் பதிப்பில் இன்றைய தினம் என் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது.  என் லண்டன் வாசகர்கள் ஏஷியன் ஏஜ் லண்டன் பதிப்பை வாங்கிப் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.  தினசரிகளில் வரும் கட்டுரைகளை இணையத்தில் படிப்பதை விட காகிதத்தில் படிப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது.  (மற்றபடி புத்தகங்களை கிண்டிலில் படிப்பதையே விரும்புகிறேன்.) ஏஷியன் ஏஜின் தென்னிந்தியப் பதிப்பு டெக்கான் கிரானிக்கிள்.  எனவே இன்றைய டெக்கான் கிரானிக்கிளில் அந்தக் கட்டுரையை வாசிக்கலாம்.  national symbols பற்றிய … Read more

சாகித்ய அகாதமி பரிசு

இந்த ஆண்டு சாகித்ய அகாதமி பரிசு வண்ணதாசனுக்குக் கிடைத்தது பற்றி சூடான ஒரு கட்டுரை குமுதம் தொடரில் எழுதியிருக்கிறேன்.  வாங்கிப் படித்து இன்புறவும்.

பொலிக! பொலிக!

நாலைந்து தினங்களுக்கு முன்பாகவே எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நேரம் இல்லை. தினமலரில் பொலிக பொலிக என்ற தலைப்பில் ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக எழுதிக் கொண்டிருக்கிறார் பா. ராகவன். அவர் கல்கியில் பணி புரிந்து கொண்டிருந்த காலத்திலிருந்து என் நண்பர். 25 ஆண்டுகள் இருக்கும். அந்தத் தொடரில் அவரது மொழி நடை பிரமாதமாக இருக்கிறது. (பொதுவாக அவருடைய நடை எனக்கு அந்நியமாக இருக்கும்.) மேலும் மிக நீண்ட கால ஆய்வுகளைச் செய்திருந்தால்தான் இத்தனைத் துல்லியமான … Read more