புதுவை இளவேனில்

  (படங்களின் மேல் சொடுக்கி, முழுத்திரையில் பார்க்கவும்.) பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சாருவை பிரத்யகே photo shoot செய்தவர் புதுவை இளவேனில். சாரு நிவேதிதா, சுந்தர ராமசாமி, இளையராஜா முதலியோரை இவர் எடுத்த படங்களுடன் சிறப்பு காலண்டரை இவ்வருடம் கொண்டுவந்துள்ளார். தேவைப் படுவோர் புதுவை இளவேனிலைத் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி: 9842382339 மின்னஞ்சல்: rathinamstills2015@gmail.com – ஸ்ரீராம்

சென்னை புத்தகக் கண்காட்சி

ஜனவரி 6 முதல் ஜனவரி 19 வரை சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இடம்: செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன்  மேல்நிலை பள்ளி (பச்சையப்பா கல்லூரி எதிரில்), பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை. நேரம்: வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை. வார இறுதிகள் மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண்: 663), உயிர்மை … Read more

ஜனவரி 7, அடியேனும் ஜெயமோகனும்…

வருகின்ற சனிக்கிழமை 7-ஆம் தேதி மாலை தி.நகர் சர் பிட்டி தியாகராயா அரங்கில் அடியேனும் ஜெயமோகனும் மனுஷ்ய புத்திரனும் அராத்துவின் புதிய நூல்களைப் பற்றிப் பேச இருக்கிறோம். ஆமாம், ஒரே மேடையில்தான். இதுவரை நிகழ்ந்திராத நிகழ்வு. இனிமேலும் நிகழ சாத்தியமில்லை. மனுஷ்ய புத்திரனின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் எஸ்.ரா. இரவு எட்டேகாலுக்குப் பேசத் துவங்கி மைக்கை ஒன்பதே முக்காலுக்கு என்னிடம் கொடுத்தார். அதற்குள் முக்கால்வாசிக் கூட்டம் போய் விட்டது. மீதிப் பேருக்கு செம பசி. … Read more