கிழட்டுத்தனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனோடு இன்று நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குப் போயிருந்தேன்.  பூங்காவில் பெருங்கூட்டம்.  இனிமேல் போக மாட்டேன்.  எம்மார்சி நகர் பெங்களூர் மாதிரி இருக்கிறது.  திரும்பின இடமெல்லாம் பூங்கா.  பூங்காவில் ஆட்களே இல்லை.  பெரிய பெரிய சாலைகள்.  சாலைகளிலும் ஆட்கள் இல்லை.  ராகவன் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார். இரண்டு தினங்களுக்கு முன்பு நாங்கள் வேலை பார்த்த அஞ்சலகத் தலைமையகத்துக்குச் சென்றிருந்தாராம்.  அவரைப் பார்த்த ஒவ்வொருவருமே “ஐயோ” என்றுதான் பேச்சையே ஆரம்பித்திருக்கிறார்கள்.  “ஐயோ, ஷுகரா?  ஏன் இப்படி இளைத்து … Read more

ரேமண்ட் கார்வர் கதை பற்றி…

இன்று மாலை அராத்து போன் செய்து ஜி. குப்புசாமி மொழிபெயர்த்த வீட்டுக்கு இவ்வளவு அருகில் இவ்வளவு தண்ணீர் என்ற சிறுகதையைப் படித்தேன் என்றார்.  அருஞ்சொல் இதழில் வந்திருந்ததை நான் என் முகநூலில் பகிர்ந்திருந்தேன்.  அதனால் படித்ததாகச் சொன்னார்.  நான் அந்தக் கதையை குப்புசாமியின் தேர்வுக்காகவும் அவரது மொழிபெயர்ப்புக்காகவும் அருஞ்சொல் இதழுக்காகவும் மட்டுமே பகிர்ந்திருந்தேன்.  நான் படிக்கவில்லை.  படிக்கவும் நேரம் இல்லை.  அதோடு ரேமண்ட் கார்வர் பற்றி அதிகம் பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  உலக அளவில் மிகவும் பிரபலமானவர்.  … Read more

வயதும் இளமையும் (சென்ற கடிதங்களின் தொடர்ச்சி)

’கமலுக்குக் கிசுகிசு, எனக்கு அறிவுரையா?’ என்ற உங்கள் கடிதத்தைப் படித்த பிறகு என்னால் இந்தக் குறிப்பை எழுதாமல் இருக்க முடியவில்லை. எனக்கு உங்களைக் கடந்த பதினோரு ஆண்டுகளாகத் தெரியும்.   பதினோரு ஆண்டுகளாகவே எனக்கு அந்த ஆச்சரியம் உண்டு, அதை உங்களிடமே கூட நான் பலமுறை பலமுறை கேட்டிருக்கிறேன், எப்படி நீங்கள் வயதே ஆகாமல் இருக்கிறீர்கள் என்று.  ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தலைமுடிக்கு வண்ணம் அடிப்பதை விட்ட பிறகுதான் நீங்கள் முன்னை விட இன்னும் இளமையாகவும் அதிக … Read more

கமலுக்குக் கிசுகிசு, எனக்கு அறிவுரையா?

அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சாரு சார், வணக்கம். இன்று ‘அருஞ்சொல்’ வெளியானது.  கடுமையான வேலை நெருக்கடி என்பதால், இணைப்பை உடனடியாக அனுப்பி வைக்க இயலவில்லை.  இதுவே இணைப்பு: அருஞ்சொல் | News & Views Daily (arunchol.com) நீங்கள் முழுமையாக ஒரு ஓட்டம் வாசித்து விட்டு, வெளிப்படையான விமர்சனங்களை எனக்குச் சொல்ல வேண்டும்.  நல்லபடி வந்திருப்பதாக நினைத்தால், உங்கள் வாசகர்களுக்கும் தளத்தின் வழியே பகிர்ந்து கொள்ளுங்கள். நேற்று ஒரே நாளில் ஐந்தாறு காணொளிகள் பதிவாகின.  ஒரே நாளில் … Read more