கர்ஜனையும் அழுகையும்…
எழுத்தாளர்களுக்கு தமிழ்நாட்டில் மதிப்பு இல்லை என்று தெரிகின்றதல்லவா, பின் எதுக்காக தொடர்ந்தும் இந்த வகையான தாழ்வுச் சிக்கல் கட்டுரைகள். எழுத்தாளரை மதிக்க வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி எழுதுவது சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது சாரு. சீலேயில் மதித்தார்கள் என்பதற்காக, கேரளத்தில் மதித்தார்கள் என்பதற்காக எல்லா இடத்திலும் அப்படியே இருக்குமா என்ன. நான் இலங்கையைச் சேர்ந்தவன். எங்களது நாட்டிலும் எழுத்தாளர்களுக்கு ஆஹா ஓஹோ என்ற வரவேற்பு இல்லை. சிங்கள திரைப்பட நடிகர்களையும் இங்கே தலைமேல் வைத்துக் கொண்டாடுவதில்லை. கிரிக்கெட் விளையாடுபவர்களை நாங்கள் … Read more