இசை: எந்து தாகிநாடோ

ராக ஆலாபனை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த க்ருதி ஒரு உதாரணமாகத் திகழ்கிறது. தோடி ராகம். இதில் முசிறி சுப்ரமணிய ஐயர் நமக்கு ஒரு அற்புத அனுபவத்தைத் தருகிறார். குரலினிமைக்கு எப்போதும் பாலமுரளியையும் எம்.எஸ்.ஸையும் சொல்வார்கள். நான் முசிறியைச் சொல்வேன். சங்கீதம் என்றாலே எல்லோரும் fanaticsதான். நான் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ரொம்ப ரகளை நடக்கக் கூடிய இடம். எல்லோருக்குமே உடும்புப் பிடிதான். பாலமுரளிக்கெல்லாம் பெரிய தற்கொலைப் படையே உண்டு. இந்த … Read more

இசை: தொரகுநா இடுவண்டி

தியாகபிரம்மத்தின் புகழ் பெற்ற கிருதிகளில் ஒன்று தொரகுநா இடுவண்டி. பிலஹரி ராகத்தில் அமைந்தது. இது ஒரு சினிமாவிலும் இடம் பெற்று விட்டதால் மலினமான புகழையும் அடைந்து விட்டது.  போகட்டும்.  இதை எனக்குப் பிடித்த சங்கீதக் கலைஞர்கள் எப்படியெல்லாம் அனுபவம் கொண்டிருக்கிறார்கள் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.  பலருடையது கிடைக்கவில்லை.  குறிப்பாக வோலட்டி வெங்கடேஸ்வரலு, முசிறி சுப்ரமணிய ஐயர், முடிகொண்டான் வெங்கடராம ஐயர், அரியக்குடி போன்றோரது தொரகுநா கிடைக்கவில்லை.  ஆனால் வீணை எஸ். ராமனாதனின் தொரகுநா கிடைத்தது.  என்ன … Read more

இன்று இரவு 9 மணிக்கு…

இன்று (சனிக்கிழமை) இந்திய நேரம் இரவு 9 மணிக்கு அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கலையும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் பேசுகிறேன். (அமெரிக்க நண்பர்கள் தங்கள் நேரத்தை இதற்குத் தக்கபடி கணக்கிட்டுக் கொள்ளுங்கள்) ஒரு மணி நேரம் பேசுவேன். கேட்க விருப்பப்படும் நண்பர்கள் கேட்கலாம். சக எழுத்தாளர்களுக்குப் புதிதாக ஒன்றும் இருக்காது என்பதை இப்போதே உறுதி கூறி விடுகிறேன். எழுத்தாளர்கள் குறித்த என்னுடைய வழக்கமான பேச்சு அல்ல இது. வாழ்க்கையைக் கலாபூர்வமாக வாழ்வது எப்படி என்று பேசுவேன். … Read more

நெகிழ்ச்சி

ரோஜா முத்தையா நூலகத்திலிருந்து புத்தகம் எடுக்க உதவி கேட்டு எழுதினேன் இல்லையா, எழுதின பத்து மணி நேரத்துக்குள் சுமார் ஐம்பது பேர் தாங்கள் செல்வதாக எழுதினார்கள். ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் அடைந்தேன். இதில் பத்து பேர் மிக நெருங்கிய நண்பர்கள். ஒரு நண்பர் தமிழக அரசில் ஒரு துறையின் தலைவராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர். அவர்தான் முதலில் தொடர்பு கொண்டவர் என்பதால் அவரிடமே பொறுப்பைக் கொடுத்தேன். வேலை முடிந்தது. இவ்வளவு அன்புக்கும் என் பிரதி உபகாரம் என் … Read more

இந்த ஊரில் எப்படி வாழ்கிறீர்கள்? – சிறுகதை

ஒரு நிறுவனம் எப்படி உயர்ந்த நிலையிலிருந்து வீழ்ச்சி அடைந்து காணாமல் போகிறது என்பதை ஏர்டெல் நிறுவனத்தின் மூலமே அவதானித்து வருகிறேன்.  இண்டர்நெட் என்பது எனக்கு அறிமுகமான நாளிலிருந்தே ஏர்டெல் இணைப்புதான் வைத்திருக்கிறேன்.  சுமார் பதினைந்து ஆண்டுகளாக. சென்னையே வெள்ளத்தில் மிதந்தபோது கூட எனக்கு இண்டர்நெட் இல்லாமல் இருந்ததில்லை.  இண்டர்நெட் இல்லை என்ற பேச்சே பதினைந்து ஆண்டுகளில் இல்லை.  ஆனால் கடந்த ஆறு மாதங்களாக இடி இடித்தால் இண்டர்நெட் வெட்டு, மழை பெய்தால் வெட்டு, புயலடித்தால் தொடர்ந்தாற்போல் மூன்று … Read more

மன்னித்து விடு மாயா

நீ எங்கும் நிறைந்தவள் என்பதை மறந்து விட்டு இந்த ஊருக்கு வந்தேன் நீ சிந்தனைக்கும் அப்பாற்பட்டவள் என்பதை மறந்து விட்டு உன்னைப் பற்றி சிந்தித்து விட்டேன் நீ வார்த்தைகளுக்குள் அடங்காதவள் என்பதை மறந்து விட்டு உன்னைப் பாடி விட்டேன்